
1. ஒல்லியான பெண்கள் பாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் சதைப் போடும்.
2. நகக்கண்ணில் வீக்கமும், வலியும் இருந்தால், ஒரு கரண்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, சுட வைத்து, ஒரு துணியில் உப்பை மூட்டையாக கட்டி எண்ணெயில் தோய்த்து லேசான சூட்டில் நகக் கண்ணில் ஒற்றினால் விரைவில் சரியாகும்.
3. வயிற்றுப்புண் உள்ளவர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியைக் குடித்தால் நிவாரணம் நிச்சயம்.
4. கல்யாண முருங்கை இலையை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக்கொண்டால் சளி, கபம் நீங்கி விடும்.
5. பெண்கள் சிலருக்கு அரும்பு மீசை இருக்கும். அவர்கள் குப்பைமேனி இலை, வேப்பிலை, விரலி மஞ்சள் மூன்றையும் கலந்து அரைத்து மீசை உள்ள இடத்தில் தடவி வந்தால் மீசை காணாமல் போய் விடும்.
6. கைநகங்களுக்கு கீழே கருமை நிறம் ஏறயிருப்பவர்கள், தேங்காய் எண்ணெய்யுடன் சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
7. கொள்ளுடன் சுரைக்காய் இரண்டு துண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி, அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
8. பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டு சாப்பிட்டால் தொண்டைக் கட்டு விலகும், தொண்டை கரகரப்பு நீங்கும்.
9. ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்துச் செய்த ஜூஸை அடிக்கடி பருகி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளின் தாக்கம் மட்டுப்படும்.
10. பனை நுங்கு நீர் எடுத்து அதில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து வியர்க்குரு மீது தடவி வர வியர்க்குரு மறைந்து விடும்.
11.வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை குறையும்.
12. வாழைப்பூவை அரைத்து சாறு எடுத்து, அச்சாற்றின் அளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாதல், வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)