
அஜீரணம் நீங்க வேண்டுமா?
இரண்டு ஸ்பூன் ஓமத்தையும் கால் ஸ்பூன் உப்பையும் தூள் செய்து வாயில் போட்டு வென்னீர் குடித்தால் போதும் அஜீரணம் உடனே நீங்கி பசியும் ஏற்படும்.
2 டீஸ்பூன் கருவேப்பிலை சாற்றை ஒரு டம்ளர் மோரில் கலந்து கொடுத்தாலும் அஜீரணம் நீங்கும்.
சுளுக்கு நீங்க வேண்டுமா?
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக வைத்து அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டு கலக்கி சுளுக்கில் பூசி வந்தால் சுளுக்கு குணமாகும்.
தலைவலி இருந்தால் தீர வேண்டுமா?
சிறிது சீரகம், ஒரு கிராம்பு, இரண்டு மிளகு ஆகியவற்றை பசும்பால் விட்டு நைசாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி பறந்து விடும்.
கண் வலி மறையணுமா?
ஒரு வெள்ளைத் துணியில் சூடு சாதம் விளக்கெண்ணெய் கலந்து கண்களின் மேல் ஒத்தடம் கொடுத்தால் கண்வலி சிறிது சிறிதாக குறையும்.
முகத்தில் வெண்தேமல் மறையணுமா?
ஆவாரை வேரை, எலுமிச்சை சாறு கலந்து அரைத்து பூசி வந்தால் நாளடைவில் மறையும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் மூச்சு திணறல் குறையணுமா?
ஜலதோஷத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டால், சிறிது ஓமத்தை துணியில் முடிந்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் மூச்சு திணறல் குறையும்.
சளி குணமாக வேண்டுமா?
பத்து மிளகு, கறுப்பு வெற்றிலை சாறு ரெண்டு ஸ்பூன், சுக்கு ஒரு சிறு துண்டு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு போட்டு இரண்டு வேளைபருகினால் சளி பூரணமாக குணம் ஆகிவிடும்.
வயிற்றில் உள்ள வாயுக்கள் நீங்கணுமா?
திரிகடுகம், ஓமம் / சீரகம் இந்துப்பு, கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து வறுத்து தூள் செய்து தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் சகல வாயுக்களும் நீங்கும்.
குரல் கட்டிக்கொண்டு பேச முடியலையா?
உலர்ந்த திராட்சை 5 மென்று தின்றால் குரல் பழையபடி பேச்சு வரும்.
நன்றாக பசி எடுக்க வேண்டுமா?
காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும் உடனே பசி எடுத்துவிடும்.
மலச்சிக்கல் மூலச்சூடு குணமாகணுமா?
தினமும் ரோஜா குல்கந்து பாலில் ஒரு ஸ்பூன் போட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூலச்சூடு சீதபேதி ஆகியவை குணமாகும். உடலின் உறுப்புகள் சரிவர இயங்க ரோஜா குல்கந்து நல்லது.
தலைவலி, தலைக்கனம் குறையணுமா?
உலர்ந்த நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைக்கனம் குறைவதோடு தலைவலியும் நீங்கிவிடும்.
தும்மல் குறையணுமா?
தொடர்ந்து தும்மல் ஏற்பட்டால் இரண்டு நெல்லிக்காய்களை துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் சரியாகும்.
மாதவிலக்கால் ஏற்படும் வயிற்று வலி குறையணுமா?
ஒருடம்ளர் மோரில் பெருங்காயத்தூள் போட்டு குடித்தால் வயிற்று வலி பறந்து விடும்.
வாய்ப்புண் குறைய வேண்டுமா?
வாயில் நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளித்து சிறிது நேரம் கழித்து துப்பி விடலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் வாய்ப்புண் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை பாசிப் பருப்புடன் தேங்காய் பால் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் புண் ஆறும் வாய் நாற்றம் மறையும்.
ரத்த சோகை நீங்க கணுமா?
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சரியாகும்.
ஜலதோஷத்தால் மூக்கடைப்பு நீங்கணுமா?
மூக்கடைப்பு ஏற்பட்டால் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயை நாசியில் (மூக்கில்) விட்டால் உடனே குணம் கிடைக்கும்.
பல் ஈறு வீங்க வலி குறையணுமா?
படிகாரத்தை சிறு தூளாக்கி எண்ணெயில் போட்டு வாய் கொப்பளித்து வர வலி நீங்கி வீக்கம் குறையும்.
தலைசுற்றல் குறையணுமா?
இஞ்சியை தோல்சீவி கடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், ரத்த அழுத்தம் குறையும். தலை சுற்றல் அடிக்கடி வந்தாள் இஞ்சி சாறை தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
தொண்டை கட்டு வலி நீங்க வேண்டுமா?
வலியுடன் கூடிய தொண்டைக்கட்டாக இருந்தால் சிறிய வெங்காயத்தை பச்சையாக இரண்டு சாப்பிட வெங்காயத்தின் சாறு தொண்டையில் பட்டவுடன் வலி நீங்கி தொண்டை கட்டு சரியாகும்.
உணவு செரிக்காமல் உள்ளதா?
உணவு செரிக்காமல் இருந்தால் ஒரு வாழைப்பழத்தினுள் சிறிது பெருங்காயம் வைத்து சாப்பிட்டால் உணவு செரித்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.
தொகுப்பு - இயற்கை கை வைத்திய நூலிலிருந்து)