
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் தலைமுடி உதிர்வால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களே அதிக முடி உதிர்வின் மூலம் பாதிக்கப்படுகிறார்கள். தலையில் உள்ள முடி முழுவதுமாக கொட்டி வழுக்கை வரும் அளவிற்கு போய் விடுகிறது. இது ஆண்களின் தோற்றத்தை மட்டும் மாற்றாமல் அவர்களை மனதளவில் பாதிக்க வைக்கக்கூடிய விஷயமாகவும் உள்ளது. இந்தப் பதிவில் முடி உதிர்வை குறைத்து வழுக்கை விழாமல் இருக்க உண்ண வேண்டிய உணவுகளைப் பற்றிக் காண்போம்.
1. விதைக் கலவைகள்:
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு விதைகள் மிகவும் நல்லது. இதில் தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான ஒமேகா 3 ஆசிட், வைட்டமின் ஈ, புரதம் ஆகியவை இருக்கிறது. விதைகளில் வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது. Pumpkin seeds, sunflower seeds போன்ற விதைகளை முடிவளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினசரி அவசியம் சாப்பிட வேண்டும்.
2. பாதாம்:
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மிக அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் பாதாமில் 25.63 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மட்டுமில்லாமல் Hair follicleல் ஏற்படும் சேதத்தையும் தடுக்கும். பாதாமில் இருக்கும் L-lysine என்னும் அமினோ ஆசிட் DHT Blocker ஆக செயல்பட்டு வழுக்கையை தடுக்கிறது.
3. தேங்காய் எண்ணெய்:
நம்மில் பலரும் தினமும் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவுகிறோம். ஆனால், தினமும் காலையில் தேங்காய் எண்ணெய்யை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுப்பதின் மூலமாக வலிமையான முடி வளர்வதற்கு உதவி செய்கிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள Lauric acid என்னும் அமிலம் வழுக்கை தலை வராமல் தடுக்க உதவுகிறது.
4. முட்டை:
முட்டையில் முடிவளர்ச்சிக்கு தேவையான Protein, biotin, sulphur, vitamin A, vitamin D ஆகியவை இருக்கிறது. முட்டையில் 6 முதல் 7 கிராம் வரை புரதம் இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்வது முடி வளச்சிக்கு உதவும்.
5. Lycopene foods:
பொதுவாக சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் உணவுகளில் Lycopene என்னும் நிறமிச்சத்து இருக்கிறது. இது வழுக்கை உண்டாவதற்கு காரணமான DHT ஹார்மோனை Neutralize செய்ய உதவுகிறது. தக்காளி, தர்பூசணி, கேரட் போன்றவற்றில் Lycopene சத்து அதிக அளவில் உள்ளது. இது ஒரு சிறந்த DHT blocker ஆகவும் வேலை செய்கிறது. மரபு ரீதியாக வரும் வழுக்கைத் தலையின் வாய்ப்புகளையும் குறைக்கும். தினமும் இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் வழுக்கைத் தலைக்கு விரைவில் குட்பை சொல்லி விடலாம்.