சாப்பிடும்போது முடி விழுங்கி விட்டீர்களா? உள்ளே சென்றால் என்ன ஆகும்? தெரிந்துகொள்ளுங்கள்!

Hair
Hair
Published on

என்னதான் வீட்டில் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும் சரி, தற்செயலாக அதில் ஒரு முடியைக் கண்டால் பலருக்கும் பசியே அடங்கிவிடும். உணவில் முடி விழுந்தால் உறவு வளரும் என்பதெல்லாம் வெறும் பேச்சுதான், உண்மை இல்லை. ஆரோக்கியமான உணவில் ஒரு முடி கலந்துவிட்டாலும், அது சில நேரங்களில் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது ஒரு அருவருப்பான அனுபவம் என்பதில் சந்தேகமில்லை.

முடி என்பது 'கெரட்டின்' எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது. இது நேரடியாக நம் உடலுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், முடியில் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சாயங்கள் அல்லது வெளிப்புறத் தூசுக்கள் படிந்திருக்கலாம். இவை உணவுடன் சேரும்போது, உணவின் தரத்தைக் கெடுத்து, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

சாப்பிடும்போது தற்செயலாக ஒரு முடி வாய்க்குள் சென்றுவிட்டால், அது அடி நாக்கிலோ அல்லது தொண்டையிலோ சிக்கி உடனே ஒருவித குமட்டல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலர் இதை வெளியேற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் விரல்களை விட்டு வாந்தி எடுக்க முயற்சி செய்வார்கள். ஆனால், அப்படிச் செய்வது தேவையற்ற சங்கடங்களையும் காயங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

தற்செயலாக அந்த முடி தொண்டைக்குள் இறங்கி வயிற்றுக்குப் போய்விட்டால் என்ன ஆகும் என்று பயப்படத் தேவையில்லை. நமது உடல் ஒரு வெளிப் பொருளை உள்ளே அனுமதிப்பதில்லை. வயிற்றுக்குள் சென்ற முடியை வெளியேற்ற, உடலின் இயற்கையான செயல்பாடுகள் தூண்டப்படும். இதன் ஒரு பகுதியாக, சில சமயங்களில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

இப்படி ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்த மருந்துகள் அல்லது கை வைத்தியம் எதையும் உடனே செய்யக் கூடாது. பொதுவாக, வயிற்றுப்போக்குடன் சேர்ந்து முடி தானாகவே உடலில் இருந்து வெளியேறிவிடும். இது உடலின் ஒரு தற்காப்பு நடவடிக்கை. ஆனால், வயிற்றுப்போக்கு அளவு அதிகமாகி, உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பாட்டி கால எளிய இயற்கை வீட்டுவைத்தியம்!
Hair

பழங்காலத்தில் பாட்டி வைத்தியமாக, முடியை விழுங்கிவிட்டால் வெறும் சோற்றை பெரிய உருண்டையாக உருட்டி மெல்லாமல் விழுங்கச் சொல்வார்கள். அல்லது நெல்மணியை விழுங்கினால், முடி அதைச் சுற்றி வெளியேறிவிடும் என்று சொல்வார்கள். இவை சில சமயங்களில் உதவியிருக்கலாம் என்றாலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் அல்ல.

விழுங்கிய முடியை வெளியேற்ற இத்தனை முயற்சிகள் செய்வதை விட, உணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் சுகாதாரமாக இருப்பதும், சாப்பிடும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பாமல் உணவின் மீது கவனம் செலுத்துவதும் மிகச் சிறந்தது.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியாக முடி வளர வீட்டிலேயே செய்யலாம் இயற்கையான ஷாம்பு..!
Hair

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com