வெல்லம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்; அழகு கிடைக்கும் என்பது தெரியுமா?

Eating jaggery will give you health; Did you know that you can get beauty?
Eating jaggery will give you health; Did you know that you can get beauty?https://news.lankasri.com

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும், இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக மறதியை தடுக்கலாம். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்ட்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சமச்சீர் அடைந்து விடும். வெல்லத்தில் அதிக நார்சத்து உண்டு. அது உணவு குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். பலரும் செரிமான திரவங்களை தூண்டிவிட்டு ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களை கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு கொடுத்தால் போதும். அனீமியாவுக்கு இரும்பு சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையின்போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைச்சுற்றலும் இருக்கும். அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உயர் இரத்த அழுத்த பிரச்னையை தவிர்க்கலாம். வெல்லத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

இரவு தூங்கும் முன்பு பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். இது தவிர காலையில் எழும்போதும் மிகவும் உற்சாகமாக உணரலாம். இரவில் தூங்கும் முன் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ள இது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

வெல்லம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு. பிடிப்புகள் உட்பட மாதவிடாய் சுழற்சி கோளாறுகளுக்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். மாதவிடாய்க்கு  சற்று முன்பு உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் மற்றும் PMS அறிகுறிகள் இருந்தால் எண்டோர்பின்களை வெளியிடுவதற்கு உதவுவதால் குறிப்பிட்ட பிரச்னைகளை எதிர்த்து போராட நீங்கள் ஒரு துண்டு வெல்லத்தை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்டோர்பின்கள் பெண்கள் உடலை தளர்த்தும். இதன் விளைவாக முன்கூட்டியே மாதவிடாய் வலிகளைத் தடுக்கிறது.

வெல்லம் உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செய்கிறது. கோடைக்காலங்களில் குளிர்ந்த நீர் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட பானங்கள் ஜூஸ் சாப்பிட்டால் கோடையின் கடுமையே தெரியாது.

வெல்லம் சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து காக்கிறது. சரும சுருக்கத்தையும் தடுக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
அலர்ஜி தொல்லைகளை விரட்டும் இலந்தைப்பழம்!
Eating jaggery will give you health; Did you know that you can get beauty?

சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது. வெல்லத்தில் இரும்பு சத்து இருப்பது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வெல்லத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தம் செய்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வெல்லத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்திற்கு மென்மையான ஒளிரும் தோற்றத்தை அளிக்கிறது. வெல்லத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் வீக்கம், சிவத்தல் மற்றும் எரிச்சலை போக்குகிறது. முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கிறது.

வெல்லத்தில் அதிக அளவு இரும்புச் சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை உள்ளன. இது கூந்தலுக்கு வலிமையை தருகிறது. முன்கூட்டியே நரைமுடி பிரச்னைகள், கூந்தல் உதிர்தல் போன்றவற்றைப் போக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com