
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் டீ குடித்து தான் அன்றைய நாளை தொடங்குகின்றனர். வெறும் வயிற்றில் டீ குடிப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் 7 தீமைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனை
வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அதில் உள்ள காஃபின் வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிப்பதன் மூலம் இரைப்பை எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
2. செரிமான அமைப்பு பாதிப்பு
டீயில் டானின்கள் எனப்படும் ஒரு தனிமம் உள்ளதால் இதை வெறும் வயிற்றில் பருகும் போது இது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவித்து வயிற்று சுவர்களை சேதப்படுத்துகிறது.
3. இரத்த சர்க்கரை அளவு
வெறும் வயிற்றில் டீ குடிப்பது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வழிவகுத்து நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.
4. ஹார்மோன் சமநிலையின்மை
தேநீரில் உள்ள காஃபின் பெண்களுக்கு அதிகமாக ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தைராய்டு அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. நீரிழப்பு
டீயில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் இருந்து நீரின் அளவைக் குறைத்து நீர் இழப்புக்கு வழி வகுப்பதால் தேநீரை காலையில் தவிர்க்க வேண்டும்.
6. வாய் துர்நாற்றம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது வாயில் அமிலத்தை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தையும் பற்களில் தகடு உருவாவதையும் ஏற்படுத்தி பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
7. மன ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடலில் காஃபின் அளவு அதிகரித்து தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
என்ன செய்ய வேண்டும்?
* காலையில் எழுந்தவுடன், முதலில் வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை சாறு குடிக்கவும்.
* டீ குடிக்க வேண்டிய அவசியம் இருந்தால், தேநீருடன் லேசான பிஸ்கட் அல்லது உலர் பழங்கள் சாப்பிடுங்கள்.