எலும்பை வலுவாக்கும் எட்டு உணவுகள்!

Eight Foods That Make Bones Stronger
Eight Foods That Make Bones Stronger
Published on

டலின் அஸ்திவாரமே எலும்புகள்தான். எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முக்கியமாக, நமது உடலில் இருக்கும் தசைகள், உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால் வயதாக, ஆக எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே எலும்புகள் பலவீனமாக இருக்கும். ஆனால், தற்போது முப்பது வயதை நெருங்கி விட்டாலே பலருக்கும் எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டு வலி, முதுகு வலி, கை வலி என புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

எலும்புகள் உறுதியாக இருக்கவும், எலும்பு முறிவு ஏற்பட்டால், விரைவில் இணையவும் கால்சியம் சத்து முக்கியம். அதேசமயம் கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை. இதைத் தவிர இன்னும் சில சத்துக்களும் எலும்பின் வலிமைக்கு முக்கியம். உணவுகளில் எலும்பின் வலிமையை அதிகரிக்கும் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்தே ஆக வேண்டும். அந்த வகையில் எலும்பை பலப்படுத்தும் எட்டு உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கேழ்வரகு: நூறு கிராம் கேழ்வரகில் 35 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. சொல்லப்போனால் சிறுதானியங்களில் மிக அதிக அளவு கால்சியம் சத்தைக் கொண்டது இந்த கேழ்வரகு. எனவே, அவ்வப்பொழுது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை, ராகி புட்டு என்று சாப்பிட்டு வரலாம். இதனால், எலும்பின் வலிமை அதிகரிக்கும்.

2. முருங்கைக்கீரை: முருங்கைக்கீரையை எடுத்துக் கொண்டால் பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிக கால்சியம் சத்து உள்ளது. எனவே, வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

3. தயிர்: பாலில் இருந்து பெறக்கூடிய தயிரிலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன.

4. கருப்பு உளுந்து: கருப்பு உளுந்திலும் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே, அடிக்கடி கருப்பு உளுந்து சாப்பிடுவது நல்லது.

5. கொள்ளு: கொள்ளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடித்தால் எலும்புகள் வலுவாகும்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்களை உங்கள் உறவினர்களிடம் தெரியாமல் கூட சொல்லி விடாதீர்கள்! 
Eight Foods That Make Bones Stronger

6. அத்திப்பழம்: அத்திப்பழத்திலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. நூறு மில்லி கிராம் அத்திப்பழத்தில் இருபத்தி ஆறு மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே, தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம்.

7. பீன்ஸ்: ஒரு கப் பீன்ஸில், இருநூறு முதல் இருநூற்று இருபது மில்லி கிராம் அளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது.

8. பேரிச்சம்பழம்: நூறு கிராம் பேரிச்சம் பழத்தில் முப்பத்தி ஒன்பது மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. மேலும், இதிலுள்ள மக்னீசியம் சத்தும், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் என்பதால் தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வரலாம். இதனால் எலும்புகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com