ஒவ்வொரு கருவும் முதலில் பெண்ணாகத்தான் உருவாகிறது! ஏன் தெரியுமா?

Baby
Baby
Published on

ஒரு புதிய உயிர் உலகிற்கு வரும்போது, அதை வரவேற்கும் மகிழ்ச்சியில் நாம் பல முக்கியமான விஷயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம். ஆரோக்கியமான குழந்தை பராமரிப்புக்கு, இந்த அடிப்படை உண்மைகளை அறிவது மிகவும் அவசியம்.

குழந்தை பிறந்த உடன் எல்லோரும் மிகவும் ஆவலாகக் கேட்பது - பார்ப்பது குழந்தை ஆணா, பெண்ணா என்றுதான். இயற்கை பெண்ணினத்தை விரும்புகிறது என்பதற்கு பல உதாரணங்களைச்  சொல்லலாம்.

  • ண், பெண் இருபாலரின் குரோமோ சோமிலும் ‘X’  (பெண்ணின் மரபிழை) இருக்கிறது. தாயிடமிருந்து கிடைக்கும் எக்ஸ் இரண்டு பாலினத்திற்கும் பொது.

  • ந்த X குரோமோசோமில்தான் நமது அறிவு பொதிந்து இருக்கிறது. எந்த ஒரு கருவும் (ஆணோ - பெண்ணோ) உற்பத்தியான புதிதில்  Mullerian எனப்படும் பெண்ணின் நாளம் வளர்ந்து செயல்பட ஆரம்பிக்கிறது. சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு  Wolffian duct எனப்படும் ஆணின் நாளம் வளர்ந்து  முல்லேரியன் நாளத்தைத் தடை செய்யும் வேதிப் பொருட்களைச் சுரந்து முல்லேரியனைத் தடுத்துவிடுகிறது. எனவே, எந்தக் கருவும் உற்பத்தியில் பெண்தான் தெரியுமா? பிறகுதான்...

பிறந்த குழந்தையின் எடை என்ன என்பது அடுத்த ஒரு முக்கியமான கேள்வி. குறைப் பிரசவமா? முழு மாதமா? இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கேள்விகள்.

37 - வாரங்கள் கருவில் இருந்து பிறக்கும் குழந்தையை முழு மாதக் குழந்தை அல்லது நிறை மாதக் குழந்தை என்கிறோம். சிலருக்கு 2-3 வாரங்கள் அதிகமாகவும் ஆகலாம். 37 வாரங்களுக்குக் குறைவாகக் குழந்தை பிறந்தால் அது குறைமாதப் பிரசவம். 1 - 2 வாரங்கள் குறைவாகப் பிறந்தால் அதிகப் பிரச்னைகள் இல்லை.

இதை எவ்வாறு கணக்கிடுவது?

தை எளிதாகக் கணக்கிடலாம். கடைசியாகத் தீட்டு வந்த நாளிலிருந்து  (Last Menstrual Period) 9 மாதங்கள் அதனுடன் + அல்லது -  ஒரு வாரம் என்று கணக்கிட்டுக் கொண்டால் அந்த நாள்தான்  பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி. இதில் சிறிது மாறுபடலாம்.

இதையும் படியுங்கள்:
இரவில் பல் துலக்காமல் தூங்குபவரா நீங்க? அச்சச்சோ அவ்வளவுதான்!
Baby

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தால் கருவில் சிசுவின் நீளம், எடை, தலையின் சுற்றளவு, எலும்புகளின் நீளம், நஞ்சுக் கொடி மற்றும் கருப்பை நீரின் முதிர்ச்சி (Maturation of Placenta and Amniotic Fluid)  இதையெல்லாம் கணக்கிட்டு தேதியைச் சுமாராகக் குறிப்பார்கள். இதிலும் சில மாறுதல்கள் இருக்கலாம்.

நிறை மாதக் குழந்தை, பிறக்கும்போது 2.5 கிலோ எடை இருக்க வேண்டும். இதற்கு கீழே இருந்தால் ‘எடை குறைந்த குழந்தை’ என்று குறிக்கப்படுகிறது. குறை மாதக் குழந்தைக்கும் (Pre term or Pre mature baby) எடை குறைந்த குழந்தைக்கும் சிக்கல்கள் ஏற்படுவதை எதிர்பார்க்கலாம். குழந்தை பிறந்தவுடன் நன்றாக வீறிட்டு அழ வேண்டும். குழந்தை அழுவது தாமதமானால் மூளைக்கு இரத்த ஓட்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

குழந்தை பிறந்ததும் என்ன செய்யணும்?

குழந்தை பிறந்தவுடன் குழந்தையை நன்கு துடைத்து 2.-3 அடுக்கு துணிகள் கொண்டு சுற்றி வெதுவெதுப்பாக வைக்க வேண்டும். எடை குறைந்த அல்லது குறை மாதக் குழந்தைக்கு உடல் வெப்பம் குறைவது -  (Hypothermia) ஓர் உயிர்க் கொல்லி நோய். குளிர் காலத்தில் 5-6 அடுக்குத் துணிக் கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில்  டிசைன் எதுவும் இல்லாத காட்டன் சட்டையை முதலில் போட்டு அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியன் மெட்டிரியலில் சட்டை போடலாம். தலைக்கு காட்டன் குல்லாய், கைகளுக்கு உறை,  (Mittens) கால்களுக்கு காட்டன் சாக்ஸ் என போட்டு பாதுகாக்க வேண்டும். குழந்தையின்  சட்டையில் பட்டன், ஹுக், ஜிப் எதுவும் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது. டயாபர் போடுவதை கூடியவரைத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயா? மூங்கில் அரிசியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
Baby

பிறந்த குழந்தை நீர், மலம் இரண்டுமே அதிகம் போகும் என்பதால் பிறப்பு உறுப்பு பகுதியில் அழற்சி, பூசணத் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெளிர் நிற காட்டன் துணிகளை முக்கோணமாக மடித்து லூசாக இடுப்பில் கட்டி விடலாம். இது தருமே இயற்கை பாதுகாப்பு.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com