நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்! 

Exercise
Exercise
Published on

இன்றைய நவீன உலகில் அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. இதனால், உட்கார்ந்து கொண்டே பணிபுரியும் நேரம் அதிகரிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால், முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி என பலவித வலிகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இதற்குத் தீர்வாக, உட்கார்ந்த நிலையிலேயே செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உட்கார்ந்த நிலையிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்

  • தோள்பட்டை சுழற்சி: தோள்களை முன்னும் பின்னுமாக சுற்றுவது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை இளகுவதற்கு உதவும்.

  • தலை சுழற்சி: தலையை மெதுவாக வலம், இடமாக சுற்றுவது கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

  • கால் நீட்டுதல்: ஒரு காலினை முன்னோக்கி நீட்டி, பின்னர் பின்னோக்கி மடக்குவது கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை பலப்படுத்தும்.

  • முழங்கால் உயர்த்துதல்: இரு கால்களையும் தரையில் வைத்து, முழங்கால்களை உயர்த்தி இறக்குவது கால் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

  • கை நீட்டுதல்: கைகளை மேலே நீட்டி, பின்னர் பக்கவாட்டில் நீட்டுவது கை மற்றும் தோள்பட்டைப் பகுதியில் உள்ள தசைகளை பலப்படுத்தும்.

  • உட்கார்ந்த நிலையிலான புஷ்-அப்: கை மடக்கி மேஜை அல்லது நாற்காலியை தாங்கி, உடலை மேலே தள்ளி இறக்குவது மார்பு மற்றும் கை பகுதியில் உள்ள தசைகளை பலப்படுத்தும்.

  • உட்கார்ந்த நிலையிலான ஸ்குவாட்: கால்களை தோள்பட்டை அகலத்தில் வைத்து, உடலை கீழே குனியும் போது கைகளை முன்னோக்கி நீட்டுவது, கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை பலப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
80 வயதிலும் கண்பார்வை நன்றாகத் தெரிய இந்த காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்!
Exercise

இந்த பயிற்சிகளை தினமும் குறைந்தது 15-20 நிமிடங்கள் செய்வது நல்லது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட சில எளிய பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் நாம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த பயிற்சிகளை செய்ய நிறைய நேரம் தேவையில்லை. உங்களது வேலை இடத்திலோ அல்லது வீட்டிலோ எந்த ஒரு இடத்திலும் இந்த பயிற்சிகளை செய்யலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com