உடற்பயிற்சி செய்வது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியமான செயல்பாடாகும். இதனால், தசைகள் வலுபடுகிறது, உடலில் தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து நம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. புதிதாக ஜிம்முக்கு செல்லும்போது நாம் எதுபோன்ற உடற்பயிற்சிகள் செய்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நிற்பது இயல்புதான். இந்தப் பதிவில் ஜிம்மில் எதுபோன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முதல் வாரத்தில் கவனம் செலுத்த வேண்டியவை:
நீங்கள் இப்போதுதான் முதல் முறை ஜிம்முக்கு செல்கிறீர்கள் என்றால் எந்த பயிற்சி செய்வதற்கு முன்பும் வார்ம் அப் செய்வது அவசியம். அதேபோல, பயிற்சி செய்த பிறகு 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இது தசைகளை காயத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
எந்த பயிற்சியை செய்யும்போதும் சரியான வடிவத்தை பராமரிப்பது முக்கியம். இது தசைகளை திறம்பட செயல்பட வைத்து காயங்களைத் தடுக்க உதவும். எனவே தொடக்கத்தில் உடற்பயிற்சிகளை முறையாக செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் புதிதாக உடற்பயிற்சி செய்யும்போது லேசான எடையைத் தொடங்கி பயிற்சி செய்வது முக்கியம். முதல் வாரத்தில் குறைந்த எடையை தூக்கி பயிற்சி செய்யுங்கள். அதன் பிறகு படிப்படியாக எடையை அதிகரிக்கலாம்.
உங்கள் தசைகளுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியம். வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
என்ன உடற்பயிற்சி செய்வது?
ஜிம்முக்கு சேர்ந்த புதிதில் முதல் இரண்டு வாரங்களுக்கு சர்க்கிள் என அழைக்கப்படும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அதாவது எல்லாவிதமான தசைகளும் ஆக்டிவேட் ஆகும்படி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
முதலில் வார்ம் அப்-ல் இருந்து தொடங்கி, புஷ் அப், புல் அப் செய்யுங்கள். இவற்றை தினசரி செய்த பிறகுதான் மற்ற உடற்பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும்.
Chest- பெஞ்ச் பிரஸ் (3 Set × 10 Reps)
Back - லாட் புல்டவுன் (3 Set × 10 Reps)
Shoulder - ஓவர் ஹெட் பிரஸ் (3 Set × 10 Reps)
Front Arm - பைசெப்ஸ் கர்ள் (3 Set × 10 Reps)
Back Arm - ட்ரைசெப்ஸ் எக்ஸ்டென்சன்ஸ் (3 Set × 10 Reps)
Legs - ஸ்குவாட்ஸ் (3 Set × 10 Reps)
முதல் ஒரு வாரத்திற்கு, மேலே குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்கள் உடலில் உள்ள எல்லா தசைகளையும் ஆக்டிவேட் செய்ய உதவியாக இருக்கும். குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது இவற்றை கடைபிடிப்பது நல்லது. இது தவிர உங்கள் ஜிம்மில் இருக்கும் ட்ரெயினர் சொல்லும் உடற்பயிற்சிகளை பின்பற்றுங்கள்.