

மக்களின் ஆரோக்கியத்தை காட்டும் ஜன்னலாக நம் கண்கள் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியாத ஒரு செய்தியாகும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி, துக்கம், சோகம், பதற்றம் இவற்றை அவர்கள் கண்களின் மூலம் அறியலாம். ஆனால் மருத்துவர்கள் நம் கண்களைப் பார்த்து இதனை கண்டுபிடித்து விடுவார்கள்.
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் நம் உடலில் உள்ள பல உறுப்புகள் பாதிக்கப்படும். அதில் ஒன்றுதான் கண்ணின் உட்புறத்தில் இருக்கும் ரெட்டினா எனப்படும் விழித்திரையில் ஏற்படும் டயாபட்டிக் ரெட்டினோபதி ஆகும்.
எனவே நீண்ட நாட்களாக இருக்கும் நீரிழிவு நோயாளிகள் கண்களை கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. நீண்ட நாள் சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபட்டிக் ரெட்டினோபதி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் ஆண்டிற்கு இரண்டு முறை கண்களை பரிசோதனை செய்வது அவசியம். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகள் கண்களை பரிசோதனை செய்வது இல்லை. இதற்குக் காரணம் நீரிழிவு நோய் வந்தாலும் உடனடியாக கண்களில் பாதிப்பு தெரியாது.
இவை மிக மெதுவாக நம் கண் நரம்புகளை பாதிக்கும். இன்னும் சிலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. நம் உடம்பில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது கண்களில் தெரியவரும். எனவே ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரு முறை கண்களை பரிசோதனை செய்வது அவசியம். மேலும் டைப் ஒன் நீரிழிவு நோய் இருந்தால் கண்கள் அதிக பாதிப்பு அடையும். கரு உருவாகி வரும் போது மூளை வளர்ச்சியின் தொடர்பாக உருவானது தான் கண்கள். ரெட்டினா பரிசோதனை மூலம் நம் கண்களில் உள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள் இவற்றை பரிசோதிக்க இயலும்.
உயர் ரத்த அழுத்தம், நரம்புகள் பாதிப்பு இந்த அறிகுறிகள் கண்களில் தென்படும். இவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியலாம்.
தைராய்டு சுரப்பியின் அதிகப்படியான செயல்பாட்டால் ஏற்படுவது ஹைப்பர் தைராய்டிசம். கண்கள் இயல்பை விட பெரிதாக இருப்பது, கோபத்தை வெளிக்காட்டும் விதமாக இருப்பது, முழுமையாக கண் மூடாமல் இருப்பது, கண் நரம்புகளை அதிக அழுத்தம் ஏற்படுவது போன்றவை ஹைப்பர் தைராய்டுசம் என்பதன் அறிகுறிகள் ஆகும்.
கண் மருத்துவர்கள் இன்ட்ராக்ட் ஆப்தல் மாஸ்கோப் என்ற கருவி மூலம் ரெட்டினாவை பரிசோதனை செய்வார்கள். இதன் மூலம் கண்களில் வெண் புள்ளிகள் தெரிந்தால் அது பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதனை மருத்துவர்கள் உறுதி செய்து சொட்டு மருந்து கொடுப்பார்கள்.
இதய வால்வுகலிலும் தொற்று ஏற்படும்போது அது மூளையை பாதிக்கலாம். கண்களை பரிசோதனை செய்வதன் மூலம் இத்தகைய இதய வால்வில் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் தவிர மற்றவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை கண்களை பரிசோதனை செய்வது அவசியம். கண்களின் மூலமாக நம் உடலில் உள்ள வியாதிகளை அறிய முடியும்.
கண்கள் நம் உடலில் உள்ள வியாதிகளை காட்டும் ஜன்னல்கள்.