சூரிய கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க முகமூடியா? ஃபேஸ்கினி பின்னுள்ள ஆச்சரிய உண்மை!

இளமைத் தோற்றத்தைப் பராமரிக்கவும், சூரிய கதிர்களிடமிருந்து தப்பிக்கவும் சீனர்கள் செய்யும் விசித்திரம்.
Facekini - ஃபேஸ்கினி
Facekini - ஃபேஸ்கினிImage Credit: People's Daily, China Twitter Handle
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

ஃபேஸ்கினி என்றால் என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க...

ஆசியாவின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவில் பலர் தன் சரும நிறம் வெளிர் நிறத் தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்பதை கலாச்சார ரீதியான விருப்பமாக வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஃபேஸ்கினி அணிவதையும், சூரிய ஒளியிலிருந்து வெளிவரும், சருமத்தில் பாதிப்பை உண்டாக்கக் கூடிய அல்ட்ரா வயலட் (UV) கதிர் வீச்சுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் உடைகளை அணிவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்கமானது சரும நிறத்தைப் பராமரிப்பதற்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் பேணவும், விரைவில் வயதான தோற்றம் பெற்று விடாமல் நீண்ட காலம் இளமைத் தோற்றத்துடன் திகழவும் உதவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

ஃபேஸ்கினியானது, நீட்சித்தன்மை (Elastic) கொண்ட நூலிழைகளால் நெய்யப்பட்ட ஒரு முகக் கவசம் ஆகும்.

அது தலை, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை முழுவதுமாக மூடி, அவ்விடங்கள், சுற்றுச் சூழல்களில் படர்ந்திருக்கும் தூசிகள் உண்டு பண்ணும் உறுத்தல் மற்றும் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்கள் உண்டுபண்ணும் எதிர்மறை விளைவுகள், ஆகியவற்றால் பாதிப்படையாமல் பாதுகாக்க உதவி புரிகிறது. ஃபேஸ்கினியில் கண்களின் வெள்ளைப் பகுதி, மூக்கு மற்றும் வாய் ஆகியவை வெளியில் தெரியும்படி சிறு சிறு துவராங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

சீன நாட்டில், 2004-ல் ஷங் ஷிபான் (Zhang Shifan) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஃபேஸ்கினி, ஆரம்ப காலங்களில் கடலில் நீந்தச் செல்பவர்கள் ஜெல்லி ஃபிஷ்ஷின் தாக்குதலால் காயப்படாமலிருக்கவும், சூரிய உஷ்ணத்தினால் தோல் நிறம் கருமையடையாமல் இருக்கவும், பீச் மணலில் கிடக்கும் கூர்மையான பொருட்கள் குத்தி காயம் உண்டாவதை தடுக்கவும் அணியப்பட்டது. சீனாவில் சூரிய ஒளி உடம்பில் படாமல் தடுக்கப்படுவதை ஒரு கலையாக ஆரம்பித்து பின்னாளில் அதையே விஞ்ஞான ரீதியில் கையாள ஆரம்பித்தனர்.

2000-ம் ஆண்டுகளில் பெண்கள் வெயிலிலிருந்து தப்பிக்க குடை பிடித்தனர். பிறகு படிப்படியாக, பாதி முகத்தை மறைப்பது, தலையில் தொய்வான விளிம்புள்ள முகத்தை முழுவதும் மறைக்கக் கூடிய தொப்பி அணிவது, முழங்கைக்கு சற்று மேலே உள்ள பகுதி வரை மறைக்க நீளமான கையுறை அணிந்து லெக்கிங்ஸ் போட்டுக்கொள்வது என்றாகி கடைசியில் வெளியில் தெரியும் அனைத்து பகுதியையும் மறைத்து ஒரு முக மூடி திருடன் போல் வெளியில் நடமாடுவதை வழக்கமாகக் கொண்டனர். கோவிட் காலங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவது சாதாரண நிகழ்வானது.

UV radiation - ஃபேஸ்கினி
UV radiation - ஃபேஸ்கினி

ஃபேஸ்கினி தயாரிப்பில், அதன் நோக்கம் மற்றும் அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள் போன்றவை வேறுபட்டன. சீனாவில், 2024-ல் அல்ட்ரா வயலெட் கதிர்களின் பாதிப்பிலிருந்து உடலையும் சருமத்தையும் பாதுகாக்க உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்கினி, சந்தை விற்பனையில் உச்சத்தை தொட்டதாகக் கூறப்படுகிறது, அதாவது சீனக் கரன்சியில் கிட்டத்தட்ட 80 BN Renminbi ($11 BN).

இதையும் படியுங்கள்:
ரிட்டயர் ஆனதும் எல்லாரும் உங்களை ஒதுக்குறாங்களா? இதோ சூப்பர் தீர்வு!
Facekini - ஃபேஸ்கினி

தனித்துவ முறையில் தயாரிக்கப்பட்ட அவ்வகை ஃபேஸ்கினி, முகமூடியுடன் கூடிய தலைக் கவசம் கொண்ட ஜாக்கெட், ஹையாலுரோனிக் ஆசிட் உட்செலுத்தப்பட்ட லெக்கிங்ஸ் மற்றும் ஐஸ் கட்டி போன்று குளிர்ச்சி தரும் கையுறைகளுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தவையாகும். அவற்றுள் பல வகையான ஃபேஸ்கினிகளில் UPF (Ultraviolet Protection Factor), SPF (Sun Protection Factor) போன்றவற்றின் தரச் சான்றிதழ்களும் பொறிக்கப்பட்டிருக்கும். சுமார் 150 MN KM தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திலிருந்து வெளிவரும் வெப்பக் கதிர் வீச்சின் தாக்குதலிலிருந்து முழு உடலையும் பாதுகாத்துக் கொள்ள, சீன மக்கள் ஜவுளிப் பொறியியல் துறையில் ஒரு சிறிய தொழில் துறையை உருவாக்கியுள்ளனர் எனலாம். இதனால் அவர்கள் விரும்பியபடி சரும நிறத்தை வெண்மை நிறத்தில் வைத்துப் பராமரிக்கவும், அழகாக தோற்றமளிக்கவும் முடிகிறது.

ஃபேஸ்கினி அணிவதால் சீனர்களின் சரும நிறம் வெளுக்கிறதோ இல்லையோ, இந்தோனேஷியாவில் மக்கள், 'நான்கு வாரங்களில் சருமத்தை வெண்மையாக்குவது உறுதி' என விளம்பரப்படுத்தப்படும் குளியல் ஜெல்லைத் தேடி ஓடுவதையும், இந்தியாவில், ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒவ்வொருவரின் நிறத்தையும், 'கருநிறம் (Dusky)', 'கோதுமை நிறம் (Wheatish)', 'கிரீமி நிறம் (Creamy)' என்று வகைப்படுத்தி விமர்சனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பட்டாசு: ஆஸ்துமா நோயாளிகளும் செல்லப் பிராணிகளும் தப்பிக்க 5 வழிகள்!
Facekini - ஃபேஸ்கினி

Reference:

logo
Kalki Online
kalkionline.com