

இனி வருவது மழைக்காலம். குளிரால் சளி, இருமல் என தொண்டை சார்ந்து, உடல்நலக் குறைவு ஏற்படும். இக்காலத்தில் நம் உணவானது நார்ச்சத்து உள்ளதாக, சமச்சீரான சத்துக்கள் கொண்டதாக இருப்பது அவசியம். அவ்வாறு நார்ச்சத்து கொண்ட உணவுகளை (fiber rich foods) இந்த பதிவில் காணலாம்.
ஆளி விதைகள் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது. அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் புதினா, உப்பு சேர்த்து சாப்பிட சுவையோடு, நார்ச்சத்தையும் கொடுக்கும்.
ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கிறது. பழத்தை விட தோலில்தான் அதிக நார்ச்சத்து உள்ளதால் அப்படியே சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை தடுக்கின்றன. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வராது.
மழை,குளிர் காலங்களில் தண்ணீர் தாகம் எடுக்காததால் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தடுக்க புரோக்கோலி, கொண்டைக்கடலை என நார்சத்து அதிகமுள்ளவற்றை சாப்பிட மழைக்கால, குளிர்கால பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
ட்ரைஃப்ரூட்ஸ் குளிர்காலத்தில் சாப்பிடுவதால் நம் உடலை வெதுவெதுப்பாக வரும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
உலர்ந்த பருப்புகளை சாப்பிடுவதால் நம் சருமத்திற்கு நன்மை அளிக்கும் முந்திரிப்பருப்பு சரும விரிசல் மற்றும் உலர்ந்த குதிகால் பிரச்னையைப் போக்கும். சருத்தை இவை மென்மையாக்கி பளபளப்பை கொடுக்கும்.
பிஸ்தா பருப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவையாகும். எனவே குளிர்காலத்தில் பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகமாகி உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையாகவும் இருக்கும்.
அத்திப்பழம் சாப்பிட அனைத்து வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி, இரும்புச்சத்து கிடைக்கும்.
வால்நட் சாப்பிட அதிலுள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் இதயத்தை வலுவாக்கி குளிர்கால தொற்றுக்கள் வராமல் தடுக்கும்.
வால்நட் நம்மை சூடாக வைத்திருக்கும். அவற்றில் உள்ள ஒமேகா 3 அதிக கொழுப்பினை குறைக்க உதவுகிறது. தோல் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் முதல் அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்தது.
சிறந்த உடல் ஆரோக்காயத்திற்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் அவசியம்.