
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் எல்லோரும் சரிவிகித உணவுகளை முறையாக தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதில்லை. எங்கு பார்த்தாலும் ஃபாஸ்ட் ஃபுட்டும், ஜங்க் ஃபுட்டும் அதிகரித்து விட்ட காரணத்தினால், இப்போது நமது உடல் நலத்திலும் சில ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. அதில் முக்கியமாக இதயம் தான் பலவீனமாகிக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு நாம் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி ஆக வேண்டும்.
1. சரியான கொழுப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
அவகேடோ, நட்ஸ், கொழுப்பு குறைந்த இறைச்சி போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம், அது இல்லாமல் கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற கொழுப்புகளை தவிர்க்கவும்.
2. முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுதல்.
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழு தானிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு உதவும். அதோடு பருப்பு வகைகள்,ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. பழங்கள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
பழங்கள், காய்கறிகளில் இதயத்தை பாதுகாக்க உதவும் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளன. எனவே, தினமும் உணவில் பழங்கள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
4. உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுதல்.
இப்போது முதல் 45 நிமிடங்கள் வரை ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களால் முடிந்த அளவான நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற இதுபோன்று செய்யலாம்.
5. உணவில் உப்பை குறைத்தல்.
உணவில் அதிக அளவு உப்பை சேர்ப்பதன் மூலம் இரத்த அழுத்தமான அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உட்க்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
6. ஒரு கைப்பிடி நட்ஸ் அல்லது வேர்க்கடலை சாப்பிடுங்கள்.
பாதாம், முந்திரி, வால்நட்ஸ் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றில் உள்ள புரதச்சத்துக்கள், நார்ச்சத்து, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்றவைகள் இதயத்தை பாதுகாக்க துணை புரிகின்றன.
7. மது, புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
மது குடிப்பதாலோ புகைப்பிடிப்பதாலோ அதிலுள்ள நஞ்சுகள் நம் இதயத்தை பலவீனப்படுத்துகின்றன. எனவே, இந்த பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
8. எண்ணெய் பலகாரங்களை தவிர்த்தல்.
அதிகளவு எண்ணெயில் செய்யக்கூடிய பலகாரங்களான வடை, பஜ்ஜி, சமோசா போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
9. உடலை நீரேற்றத்துடன் வைக்க வேண்டும்.
குறைந்தது ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று லிட்டரில் இருந்து 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல் பழச்சாறுகளையும் அவ்வப்போது அருந்த வேண்டும்.
அப்புறம் என்னங்க நம்ம உடம்ப நம்ம தான பாதுகாப்பாக வச்சுக்கணும். அதனால இனிமேலாவது நல்ல ஆரோக்கியமான சிறந்த உணவுகளை எடுத்துக்கிட்டு, நிறைய தண்ணி குடிச்சு, நம்ம உடம்ப நம்ம ஆரோக்கியமா பாத்துக்கணும். இப்படி இருந்தாலே நம்ம இதயம் எதையும் தாங்கும் இதயமா நல்லா ஸ்ட்ராங்கா வேலை செய்யும்..! ஓகேவா..!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)