கும்பகோணம் திருக்கோயில்கள் - 'கருமுதல் சதாபிஷேகம்' வரை... பலனடைய வழிபடுவோம்!

Temples
Temples
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என புராணங்களில், குறிப்பிடபட்டுள்ளது. அந்த கோயில்கள் யாவும் கும்பகோணத்தைிலும் கும்பகோணத்தை சுற்றியும் அமைந்துள்ளன. அத்தகைய கோயில்களை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் கும்பகோணம் தான். இங்கு பல கோயில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர். இதனால் தான் இது கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா?

கும்பகோணம் திருக்கோயில்கள் 'கருமுதல் சதாபிஷேகம்' வரை பலனடைய இந்த கோயில்களை மட்டும் வழிபட்டால் போதும்.

குழந்தைபாக்கியத்திற்கு - சென்னியமங்கலம். திப்பிராஜபுரம்.

கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.

கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.

இதையும் படியுங்கள்:
பத்மபூஷன் விருது: நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்
Temples

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு - வைத்தீஸ்வரன் கோயில்.

ஞானம் பெற – சுவாமிமலை.

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர் சரசுவதி கோயில்.

எடுத்த காரியம் வெற்றி பெற மற்றும் மனதைரியம் கிடைக்க – பட்டீஸ்வரம் துர்கை கோயில்.

உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.

செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்.

கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்.

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்

பெண்கள் ருது ஆவதற்கும், பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னிகை).

திருமணத்தடைகள் நீங்க – திருமணஞ்சேரி கோயில்.

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ - திருச்சத்திமுற்றம் கோயில்

பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கார தேவி கோயில்

இதையும் படியுங்கள்:
படைப்பில் பாதுகாக்கப்படும் ஐந்து ரகசியங்கள் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் சொல்வது என்ன?
Temples

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர் கோயில்.

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம் கோயில்.

நீண்ட ஆயுள் பெற – திருக்கடையூர் கோயில்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... தெரிந்தால் சொல்லுங்களேன்!

logo
Kalki Online
kalkionline.com