Foods that cause BP problems at a young age!
Foods that cause BP problems at a young age!

இளம் வயதிலேயே BP பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்… ஜாக்கிரதை! 

Published on

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் உண்ணும் உணவு ஒரு முக்கிய காரணியாகும். சில உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டவை. இந்த உணவுகளை அறிந்து அவற்றை தவிர்த்தால் இளம் வயதிலேயே ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் இளம் வயதிலேயே ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

உடலில் ரத்த அழுத்தம் எவ்வாறு செயல்படுகிறது? 

ரத்த அழுத்தம் என்பது, நமது இதயம் ஒவ்வொரு துடிப்பிலும் ரத்த நாளங்களில் ரத்தத்தை செலுத்தும் அழுத்தமாகும். இது நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான அளவு ரத்தத்தை செலுத்த உதவுகிறது. ஆனால் இந்த அழுத்தம் அதிகமாக இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். 

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்: 

  1. உப்பு: உப்பு நிறைந்த உணவுகள் ரத்த நாளங்களை சுருங்கச் செய்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள் போன்றவற்றில் அதிகமாக காணப்படும்.

  2. சர்க்கரை:  அதிக அளவு சர்க்கரை கொண்ட உணவுகள் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். கேக், குக்கீஸ், சாக்லேட், சோடா போன்றவற்றில் சர்க்கரை அதிகமாக காணப்படுவதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

  3. காபி மற்றும் தேநீர்: காபி மற்றும் தேநீரில் காணப்படும் காஃபின் ரத்த அழுத்தத்தை தற்காலிகமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. 

  4. செயற்கை சுவையூட்டிகள்: பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. 

  5. கொழுப்புகள்: கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சி, வெண்ணெய், பால் போன்றவை ரத்த நாளங்களை அடைத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், இவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

  6. ஆல்கஹால்: அதிக அளவில் ஆல்கஹால் உட்கொண்டாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்யும். எனவே மது அருந்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
உயர் ரத்த சர்க்கரை அளவின் 6 அறிகுறிகள்… உங்களுக்கு இருந்தால் ஜாக்கிரதை! 
Foods that cause BP problems at a young age!

இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் அதிகரிப்பது பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கண் நோய்கள் போன்ற பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் இதனால் ஏற்படலாம். எனவே இளம் வயதில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் உண்ணும் உணவை முறையாகக் கடைப்பிடித்து, உப்பு, சர்க்கரை கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். 

logo
Kalki Online
kalkionline.com