சிறுநீரகங்களை சீராக செயலாற்ற வைக்கும் உணவுகள்!

Foods that keep the kidneys functioning properly
Foods that keep the kidneys functioning properly

ம் உடலில் சேரும் நச்சுக்களையும், தேவைக்கதிகமாக சேர்ந்துவிடும் தண்ணீர், சோடியம் போன்றவற்றையும் முறையாகப் பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் அவ்வப்போது வெளியேற்றும் வேலையைச் செய்து கொண்டிருப்பது நமது சிறுநீரகங்கள். இவற்றை நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாத்துப் பராமரிக்கவேண்டியது நமது கடமை. அதற்காக நம் தினசரி உணவுடன் பிரத்யேகமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஏழு உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

* அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்களும் குறைந்த அளவு சோடியமும் கொண்டுள்ள ப்ளூ பெர்ரியை சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உண்ண, நிறைய நன்மைகள் கிடைக்கும்.

* இயற்கையாக பாதுகாப்பளிக்கக்கூடிய கூட்டுப்பொருள் ஒன்றைத் தன்னுள் அடக்கியுள்ள ரெட் கிரேப்ஸ் சிறுநீரகங்களுக்கு நல்ல நன்மை கொடுக்கக் கூடியது.

* முட்டையின் வெள்ளைக் கருவில் தரமான புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளன. மஞ்சள் கருவில் உள்ளது போல், அதிகளவு பாஸ்பரஸ் வெள்ளைக் கருவில் கிடையாது. எனவே, சிறுநீரகக் கோளாறுடையவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் அடிக்கடி உணவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* மிதமான அளவில் ஆலிவ் ஆயில் சேர்த்துச் சமைத்த உணவுகள் சிறுநீரகங்களுக்கு நன்மை தரக்கூடியவை.

இதையும் படியுங்கள்:
30 வயதுக்கு மேல் ஆண்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்!
Foods that keep the kidneys functioning properly

* கொழுப்பைக் கரைத்து, உயர் இரத்த அழுத்தத்தை சமப்படுத்தக்கூடிய, மணமும் சுவையும் கொண்ட பூண்டு கிட்னியின் நலம் காக்க பெரிதும் உதவக்கூடியது.

* குறைந்த அளவு பொட்டாசியம் கொண்டுள்ள வெங்காயத்தை உணவுகளில் அடிக்கடி சேர்த்து உண்பது சிறுநீரகங்களுக்கு நன்மை தரவல்லது.

* அதிகளவு நார்ச்சத்து கொண்டுள்ள ஆப்பிளை அடிக்கடி ஸ்நாக்ஸ் போலவோ அல்லது வேறு முறைகளிலோ உண்ணுவதும் கிட்னிக்கு நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com