இந்திய உணவு வகைகளை சமைப்பதற்கு என்று விதிமுறைகள் இருக்கின்றன. டீப் ஃபிரை செய்தல், வேக வைத்தல், வறுத்தல் மற்றும் பேக்கிங் முறைகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகள் உணவுக்கு நல்ல சுவை மற்றும் ஆரோக்கியம் வழங்குவதோடு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. அந்த வகையில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலுக்கு கிடைக்கும் வகையில் சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் ஊற வைக்க வேண்டிய உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குயினோவா அல்லது தினை போன்ற முழு தானியங்களை ஊற வைத்து சாப்பிடுவது ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களை நீக்கி உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அனுமதிப்பதோடு மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் ஆக்கும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பு முழு தானியங்களை ஊற வைக்க வேண்டும். முழு தானியங்கள் ஊற வைத்து சாப்பிடுவதால், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் எண்ணெயில் வறுக்க கூடாது. முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசியில் பைடிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக இருப்பதோடு, ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களை நீக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கும் என்பதோடு, சமைக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதால், சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பிறகு சமைக்கப்பட்ட அரிசியின் அமைப்பும் நன்றாக இருக்கும்.
நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகள் மற்றும் பாதாம் போன்றவற்றை ஊற வைப்பது அவற்றில் உள்ள பைடிக் அமிலத்தைக் குறைத்து நொதிகளை செயல்படுத்துவதோடு, எளிதாக ஜீரணிக்கச் செய்து, அவற்றின் ஊட்டச்சத்துக்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஊற வைத்த பாதாம், பச்சை கொட்டைகள் மற்றும் விதைகளுடன் ஒப்பிடும் போது ஜீரணிக்க எளிதாக இருப்பதால், நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகளை ஊற வைத்தே சாப்பிட்டு பழகுங்கள்.
பருப்பு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளையும், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளையும் ஊற வைப்பது அவற்றில் உள்ள ஒலிகோசாக்கரைடுகளைக் குறைப்பதோடு, பருப்பு வகைகளை மென்மையாக்கி சமைப்பதை எளிதாக்குகிறது. வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் பருப்பு வகைகளை ஊற வைத்து சாப்பிட்டு சத்துக்களை அப்படியே பெறுங்கள்.
ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருக்கும் உலர் பழங்களில் வைட்டமின்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் அதிகம் காணப்படும் நிலையில் திராட்சை, அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிடுவது அவற்றை மென்மையாக்கி சுவையை மேம்படுத்துகிறது. மேலும் உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
மேற்கூறிய உணவு வகைகளை ஊற வைத்து சாப்பிட்டு ஊட்டச்சத்துக்களை உறுதியாக பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.