இதை படிச்சா உங்க போன் கீழ விழுந்துரும்! 30 வயசுக்கு மேல ஜிம் போனா இந்த நோய் வரும்!

Fat Man
Fat Man
Published on

சமீப காலமாவே, ஜிம்ல திடீர்னு மயங்கி விழற செய்தி ரொம்ப பரவலா இருக்கு. குறிப்பா, 30, 40 வயசுல இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி நடக்குது. ஏன் இப்படி நடக்குது? இதுக்கு என்ன காரணம்? இதுக்கு பின்னாடி இருக்கிற ஒரு பெரிய பிரச்சனைதான் மெட்டபாலிக் சிண்ட்ரோம். அதைப்பத்திதான் இந்தப் பதிவுல பார்க்கப்போறோம்.

ஏன் இப்படி திடீர்னு ஜிம்ல மயங்கி விழறாங்கன்னு தெரியுமா? இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனா, முக்கியமா, நம்ம வாழ்க்கை முறைதான் இதுக்கு காரணம். இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிட மாட்டோம், தூங்க மாட்டோம், கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவோம். இதனால, உடம்புல ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எல்லாம் அதிகமாகுது. இதுல ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிரச்சனை எல்லாம் சைலண்டா இருக்கும். வெளியில எந்த அறிகுறியும் காட்டாது. அதனால, நாம ஆரோக்கியமா இருக்கிறதா நினைச்சுட்டு இருப்போம். ஆனா, உடம்புக்குள்ள பெரிய பிரச்சனை இருக்கும்.

இந்த மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடம்புல இருக்கிற சில முக்கிய பிரச்சனைகளின் தொகுப்பு. அதாவது, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடம்புல அதிக கொழுப்பு, அதிக எடை இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஒன்ன சேர்ந்து ஒரு நோயை உருவாக்கும். அதுதான் மெட்டபாலிக் சிண்ட்ரோம். இந்த நோய் இருக்குறவங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கான்னு  தெரிஞ்சுக்க சில அறிகுறிகள் இருக்கு.

  1. உங்க இடுப்பு அளவு, ஆண்களுக்கு 40 இன்ச், பெண்களுக்கு 35 இன்ச் இருந்தா, உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பு அதிகம். இது கொழுப்பு அதிகமா இருக்கிற அறிகுறி.

  2. உங்க ரத்த அழுத்தம் 130/85-க்கு மேல இருந்தா, உங்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்க வாய்ப்பு இருக்கு.

  3. உங்க ரத்தத்துல சர்க்கரை அளவு அதிகமா இருந்தா, அது சர்க்கரை நோய்க்கு அறிகுறி.

  4. உங்க உடம்புல நல்ல கொழுப்பு (HDL) அளவு குறைவா இருந்தா, அதுவும் ஒரு அறிகுறி. ஆண்களுக்கு 40 mg/dL-க்கு குறைவா, பெண்களுக்கு 50 mg/dL-க்கு குறைவா இருந்தா, கவனம் தேவை.

  5. ட்ரைகிளிசரைடு என்பது ஒரு வகை கொழுப்பு. இது அதிகமா இருந்தா, மெட்டபாலிக் சிண்ட்ரோம் வர வாய்ப்பு இருக்கு. இது 150 mg/dL-க்கு மேல இருந்தா, கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கும் 'ஞாபக மறதி' இருக்கலாம்!
Fat Man

இந்த அறிகுறிகள்ல ஏதாவது மூணு அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா, நீங்க மெட்டபாலிக் சிண்ட்ரோம்ல இருக்க வாய்ப்பு இருக்கு. உடனே ஒரு டாக்டரை பார்த்து ஆலோசனை பண்றது நல்லது. ஜிம்முக்கு போகும்போது, டாக்டர் ஆலோசனை கேட்டு, உங்க உடம்புக்கு தகுந்த பயிற்சிகளை செய்யுங்க. ஒரே நேரத்துல அதிக பயிற்சி செய்ய வேண்டாம். பொறுமையா, படிப்படியா உங்க உடம்பை தயார் பண்ணுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com