டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Foods to be eaten by Dengue fever sufferers.
Foods to be eaten by Dengue fever sufferers.

ற்போது இந்தியாவில் பல இடங்களில் மழை பொழிவதால், டெங்கு ஜுரத்தினால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உயிரையேகூட பறிக்கும் ஆபத்து உள்ளது.

இது நம்முடைய இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை குறைத்து, அவற்றை வேகமாக அழிக்கிறது. இதனால் உடலுக்கு எல்லா பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் குறைவதால், ரத்த சோகையை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்குகிறது. எனவே, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

புரோட்டின் உணவுகள்: நம் தசைகளை வலிமையாக்குவதற்கும், வளர்ச்சிக்கும் புரோட்டின் தேவையான ஒன்றாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் தசை திசுக்கள் அதிகம் சேதம் அடைகிறது. எனவே, புரோட்டின் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், அவர்களின் உடல் வலிமையை மீட்டெடுக்க உதவும்.

தானியங்கள்: டெங்கு காய்ச்சல் விரைவில் குணமடைய நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவு முழு தானியங்கள். இந்த தானியங்களில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும், நார்ச் சத்துக்களும் அதிகம் உள்ளன.

இரும்புச்சத்து மிகுந்த உணவுகள்: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த இரும்புச்சத்து கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், பேரிச்சம்பழம் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி உணவுகள்: டெங்குவிலிருந்து விடுபட வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி சத்து தேவை. இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது. எனவே, விட்டமின் சி சத்து நிறைந்த ப்ரோக்கோலி, கிவி, பெர்ரி, தக்காளி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த உணவு வகைகள் அனைத்தும் டெங்குவால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்து, விரைவில் அதிலிருந்து குணமடைய உதவும். எனவே, இதை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com