இரைப்பை கோளாறு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Foods to Eat and Avoid for Gastric Disorders
Foods to Eat and Avoid for Gastric Disordershttps://m.facebook.com
Published on

ற்போதைய சூழலில் சிறு வயதினர் கூட இரைப்பை தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஆரோக்கியம் இல்லாத குப்பை உணவுகளை உண்பதுதான். இந்தப் பிரச்னையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

ஒருவருக்கு இரைப்பை சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்: அடிவயிற்றில் வலி, குமட்டல், விக்கல், வயிற்று வலி, வாந்தி, அஜீரணம், வாய்வு, வயிற்றில் பிடிப்புகள், பசியின்மை, நெஞ்செரிச்சல். வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வுகளைத் தரும்.

இரைப்பை கோளாறுகள் வருவதற்கு முக்கியமான காரணம் தற்போதைய பொருத்தமற்ற வாழ்க்கை முறை. சரியான நேரத்தில் சாப்பிடாமல், தூங்காமல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, பீட்சா. பர்கர் போன்ற குப்பை உணவுகளை உண்பது இரைப்பை கோளாறுகளை பரிசாகத் தருகின்றன. இந்த பிரச்னையை சரி செய்யாவிட்டால் குடல் வீக்கம், வயிற்றில் தொற்று நோய்கள் ஏற்படுதல், சிறுநீரகத்தில் கற்கள் போன்ற சிக்கலான நோய்களுக்கு வழிவகுக்கும்.

உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்:

இஞ்சி: பல்வேறு வகையான உடல் சிக்கல்களை களைய இஞ்சி பயன்படுகிறது. இது இரைப்பை குழாயில் உள்ள தசைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. வயிற்றில் உண்டாகும் வாயுவிற்கு சிகிச்சை அளிக்கிறது. தினந்தோறும் இஞ்சியை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி டீ குடித்தல். சட்னியில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம்.

பெருங்காயம்: வயிற்றில் உள்ள வாயு மற்றும் தசை பிடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. சாம்பார். ரசம் என சமைக்கும் பொருட்களில் பெருங்காயத்தை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கிராம்பு: உணவு உண்ட பின் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை எடுத்து மெல்ல வேண்டும். இது வயிற்றில் உண்டாகும் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மையை குறைக்கிறது.

கருப்பு மிளகு: ரசத்தில் சேர்க்கப்படும் கருப்பு மிளகு இரைப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. தேநீரில் கூட கருப்பு மிளகை தட்டி போட்டு உட்கொள்ளும்போது வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் அவ்வளவுதான்!
Foods to Eat and Avoid for Gastric Disorders

இரைப்பை ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை: கிச்சடியை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலை வளைக்காமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தக் கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நடைப்பயிற்சி. உடற்பயிற்சி அவசியம். உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக சாப்பிடாமல் சிறிய சிறிய பகுதிகளாக சாப்பிட வேண்டும். புகைப்பிடித்தலை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.

இரைப்பை கோளாறு உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பால் பொருட்கள், சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் சேர்த்த உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள், பேரிக்காய், பிரக்கோலி. முட்டைக்கோஸ். வெங்காயம், காலிபிளவர், பீன்ஸ், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com