குளிர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமாகும். குளிர்காலத்தின் தட்பவெட்ப மாற்றத்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை சரிசெய்ய குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Citrus fruit: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இந்தப் பழங்களில் உள்ள வைட்டமின் சி வெள்ளை அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகிறது. இது நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதை குழந்தைகளுக்கு ஜூஸாகவோ, பழத்துண்டுகளாகவோ சாப்பிடத் தரலாம்.
2. Yogurt: தயிரில் Probiotics அதிகமாக உள்ளது. இதிலுள்ள நல்ல பாக்டீரியா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரணத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது. பிரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
3. Berries: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் பெர்ரி பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். எனவே, உணவில் இதை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
4. Leafy green: கீரைகள் மற்றும் புரோக்கோலி போன்ற பச்சை உணவு வகையில் வைட்டமின் சி, வைட்டமன் கே, மினரல், ஃபோலேட் போன்றவை அதிகமாக உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், ஜீரணத்தை அதிகரிக்கும். இதை சூப்பாக வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
5. Ginger: இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் இருக்கின்றன. எனவே, இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது குளிர்காலத்தில் ஏற்படும் கரகரப்பான தொண்டை, அழற்சி பிரச்னைகளை போக்கும். வெதுவெதுப்பான நீரில் இஞ்சி மற்றும் தேன் சேர்த்து இஞ்சி டீயாக குடிக்கலாம். இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து குடிப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
6. Vitamin D Supplements: குளிர்காலத்தில் சூரிய ஒளி அதிகமாக இல்லாததால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை மாத்திரை மூலமாக எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.