
நம் உடலுக்குள் இடைவிடாது ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தின் வேகம், பல வகையான காரணங்களால் குறையும்போது உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. காலப்போக்கில் இது பலவித உடல் நலக் கோளாறுகள் உண்டாவதற்கு காரணமாக ஆகிவிடும்.
குறிப்பிட்ட சில வகை உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும். அப்படிப்பட்ட 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.சிட்ரஸ் ஃபுரூட்ஸ்: லெமன், ஆரஞ்சு மற்றும் கிரேப்ஸ் போன்ற அமிலத் தன்மையுடைய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களுடன், இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவக் கூடிய சில கூட்டுப் பொருட்களும் நிறைந்துள்ளன
2.கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் (Fatty Fish):
சால்மன் மற்றும் மாக்கரேல் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை ஆரோக்கியமான கொழுப்பு வகையை சேர்ந்தது. இதை உட்கொள்வதால் உடலிலுள்ள வீக்கங்கள் குறையும். இரத்த நாளங்கள் தளர்வுற்று ஆரோக்கியம் பெறும்.
3.பச்சை இலைக் காய்கறிகள்: பசலை மற்றும் காலே போன்ற கீரைகளில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் (உப்பு) சத்தை சிறு நீர் மூலம் வெளியேற்ற கிட்னிக்கு உதவி புரியும். இதனால் இரத்த அழுத்தத்தின் அளவு குறைவதற்கு வாய்ப்புண்டாகும்.
4.பெரி வகைப் பழங்கள்: ப்ளூ பெரி, ஸ்ட்ராபெரி, ராஸ் பெரி, செரி, கிரேப் வகைப் பழங்களில் அந்தோஸியானின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகளவு உள்ளது. இது இரத்தத்தில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைட் அளவை அதிகரிக்கச் செய்து, இரத்த ஓட்ட வேகத்தைத் தடுக்கும் மாலிக்யூல் (Molecules) கள் உற்பத்தியாவதை தடுக்க உதவும்.
5.தாவரக் கொட்டைகள்: முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் போன்ற கொட்டைகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல கொழுப்புகள், மக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவற்றை நம் தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையவும், மொத்த இதய இரத்த நாளங்கள் ஆரோக்கியமுடன் செயல்படவும் வாய்ப்பு உருவாகும்.
6.பீட்ரூட்: பீட்ரூட்டில் நைட்ரேட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்களை நம் உடல் நைட்ரிக் ஆக்ஸைட்களாக மாற்றி இரத்த நாளங்கள் விரிவடையவும் தளர்வுறவும் செய்யும். அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் அருந்துவது இரத்த அழுத்தம் குறைய உதவும்
7.ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் ஒமேகா-9 கொழுப்பு ஓலீக் (Oleic) அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை இரத்த அழுத்த அளவை சமநிலைப்படுத்தி வைக்க பெரிதும் உதவி புரியும்.
8.யோகர்ட்: குறைந்த அளவு கொழுப்புச் சத்துள்ள யோகர்டில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க சிறந்த முறையில் உதவும். யோகர்ட் இரைப்பை குடல் இயக்க ஆரோக்கியம் மற்றும் இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நல்ல முறையில் உதவி புரியும்.
9.முட்டை: ஊட்டச் சத்துக்கள் நிறைந்த முட்டை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.