தினசரி உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் உறுதியடைகிறது. அத்துடன் இரத்த ஓட்டம் அதிகரித்து நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, தினசரி 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் உடல் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தினசரி ஜிம்முக்கு செல்வோர் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு சில உணவுகளை எடுத்துக் கொள்வதனால் உடற்பயிற்சி செய்வதற்கான எனர்ஜியை உடலுக்கு வழங்குகிறது. எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
புரோட்டீன் பவுடர்: புரதம் நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் மூலமாகும். உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமின்றி, அனைவருமே தினசரி புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஜிம்முக்கு செல்வோர் தசை வலிமையை அதிகரிக்க புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்வது நல்லது. இதை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு எடுத்துக்கொண்டால், உடற்பயிற்சி செய்யும்போது சோர்வடையாமல் இருக்கலாம்.
வாழைப்பழம்: உடற்பயிற்சிக்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது. வாழைப்பழத்தில் சர்க்கரை ஸ்டார்ச் இருப்பதால், அது உடற்பயிற்சி செய்யும்போது எனர்ஜியைக் கொடுக்கும்.
தயிர்: தயிரில் புரதம், கால்சியம் மற்றும் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. இது உடற்பயிற்சி செய்யும்போது ஆற்றலை விரைவாக இழக்கச் செய்யாமல் பார்த்துக்கொள்கிறது.
பீனட் பட்டர்: உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பீனட் பட்டர் சாப்பிடுவது நல்லது. இதை ஒரு ரொட்டித் தூண்டில் தடவி சாப்பிடலாம். மேலும், நிலக்கடலையில் செய்யப்படும் இந்த பீனட் பட்டரில் புரதமும் அதிகம் உள்ளது.
டிரை ஃப்ரூட்ஸ்: உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக பாதாம், உலர் திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் உடற்பயிற்சி செய்யும்போதும் அதிக ஆற்றலைக் கொடுக்கும்.