
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழமாகவே இருந்தாலும் அதை சரியான நேரத்தில், சரியான முறையில் உட்கொள்வது மிகவும் முக்கியம். பழங்களை பொறுத்தவரை, அவற்றை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது நல்லதா? இது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம். மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால், பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது என்பதே.
நமது அன்றாட வாழ்வில், உணவு உண்ணும் முறைகளில் பல தவறுகள் செய்கிறோம். குறிப்பாக, உணவு சாப்பிடும்போது, சாப்பிட்ட உடனே, ஏன் உணவு சாப்பிடாவிட்டாலும் கூட தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது ஒரு பொதுவான பழக்கமாகிவிட்டது. இது செரிமான அமைப்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள் ஆரோக்கியமானவை தான், ஆனால் அவற்றை சாப்பிடும் முறையிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
பழங்களில் இயற்கையாகவே பிரக்டோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை மற்றும் ஈஸ்ட் போன்ற பொருட்கள் உள்ளன. நாம் பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும்போது, வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் நீர்த்துப் போகின்றன. இது குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த பாக்டீரியாக்கள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆல்கஹால் போன்ற வாயுக்களை உற்பத்தி செய்கின்றன, இதுவே வாயு தொல்லைக்கு முக்கிய காரணம். மேலும், வயிற்று அமிலங்கள் நீர்த்துப் போவதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகமாகி, வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வயிற்றின் அமில கார சமநிலையை வெகுவாக பாதிக்கிறது. வயிற்றின் pH அளவு மாறுவதால், அமிலத்தன்மை குறைந்து, செரிமானம் சரியாக நடைபெறாமல் போகலாம். இதனால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளும் உருவாகின்றன.
பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால், செரிமான நொதிகள் உருவாவதும் தடைபடுகிறது. செரிமானம் குறைவதால், உணவுகள் முழுமையாக செரிக்காமல் கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும், இது நாளடைவில் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது குறிப்பிட்ட உடல் உபாதைகளை உருவாக்கும். பாலில் புரதங்கள் அதிகம் இருப்பதால், பால் குடித்த உடனேயே தண்ணீர் குடிக்கும்போது, பாலில் உள்ள புரதங்கள் நொதிக்கப்பட்டு அமிலமாக மாறுகின்றன. இதனால் வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். வேர்க்கடலை மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிப்பதால் பல்வேறு செரிமான பிரச்சனைகள் வரக்கூடும்.
எனவே, பழங்களை சாப்பிடும்போது, உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள். சிறிய தவறுகள் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.