பூண்டு: இத சாதாரணமா நினைக்காதீங்க மக்களே! 

Garlic
Garlic
Published on

நமது பாரம்பரியத்தில் 'உணவே மருந்து' என்றொரு வழக்கம் உண்டு. நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. எளிதாகக் கிடைப்பதால் நாம் சில சமயங்களில் அவற்றின் மதிப்பை உணராமல் போகலாம். அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம்தான் பூண்டு. இந்தியக் குடும்பங்களின் சமையலறைகளில் பூண்டு இல்லாத இடமே இல்லை எனலாம். உணவுகளுக்குத் தனிச் சுவையைக் கொடுக்கும் இது, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

பூண்டு வெறும் சுவைக்காக மட்டுமல்ல, அது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பூண்டிற்குப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி இருப்பதாகத் தெரிவித்து, இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது பூண்டின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

பூண்டில் 'அல்லிசின்' (Allicin) உட்படப் பல முக்கியமான ஆர்கனோசல்பர் சேர்மங்கள் உள்ளன. இந்த அல்லிசின் தான் பூண்டின் பல ஆரோக்கியப் பயன்களுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்த அல்லிசினுக்குப் புற்றுநோய் செல்கள் உருவாவதையும், பரவுவதையும் தடுக்கும் ஆற்றல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோயைத் தாண்டி, பூண்டிற்கு வேறு பல முக்கியப் பயன்களும் உண்டு. இது இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. செரிமான மண்டலத்திற்கும் இது நன்மை பயக்கும்; நச்சுக்களை வெளியேற்றி, உடலைச் சுத்தமாக்க உதவும். பூண்டின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள், சருமப் பிரச்சனைகளைக் குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சிறந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க்!
Garlic

ஆயுர்வேத மருத்துவமும் பூண்டின் அருமையை எடுத்துரைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில்ப் பச்சை பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி, பல தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பூண்டு 'புற்றுநோய் எதிர்ப்பு சக்தி' கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், எந்தப் பொருளையும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது. குறிப்பாகக் கோடைக்காலத்தில்ப் பச்சை பூண்டை அதிகமாக உட்கொள்வது சில சமயங்களில் கல்லீரலைப் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பூண்டு, புற்றுநோய் போன்றக் கொடிய நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி முதல் அன்றாட உடல் நலன் வரை பல நன்மைகளை அளிக்கும் ஒரு மகத்தான மருந்து.

இதையும் படியுங்கள்:
ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் ஸ்ரீதன்வந்திரி பகவான்!
Garlic

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com