பூண்டு டீ: தேநீரின் மகாராணி! குடிப்பதால் என்னாகும்?

Garlic tea benefits
Garlic tea benefits
Published on

பூண்டை சாப்பிட்டு விட்டு நண்பர்களிடம் பேச சென்றால், அவர்கள் ஒதுங்கி சென்று விடுவார்கள். ஏனெனில், அதிலிருந்து வரக்கூடய வாசனை அவ்வாறு இருக்கும். ஆனால், இன்னொருப்பக்கம் பூண்டு சாப்பிட்டால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கிறது. Allium sativum என்று அழைக்கப்படுகிற பூண்டில் Allicin என்ற அற்புதமான கெமிக்கல் இருக்கிறது. இதுவே பூண்டினுடைய ஆரோக்கிய நன்மைக்கு காரணம்.

ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு Allicin ரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. Indian journal of nutrition என்ற பிரபல ஆராய்ச்சியில் வந்த கட்டுரைப்படி, 1.2 கிராம் பூண்டு 10 சதவீத ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நம் உடலில் கொழுப்புகள் உணவுகள் மூலமாக சேருகிறது.

அதிலும் கெட்ட கொழுப்பான LDL கொலஸ்ட்ரால் அதிகம் சேருகிறது. இதற்காக நாம் பூண்டு எடுத்துக் கொள்வது நன்மையை தரும். தொடர்ந்து 12 வாரம் பூண்டு டீயை எடுத்துக் கொள்வதால் LDL கொலஸ்டேராலின் அளவு 15 சதவீதம் குறையும் வாய்ப்பிருக்கிறது.

பூண்டு டீ குடிப்பது நம் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களுக்கு சக்தி கொடுக்கிறது. பூண்டு ஒரு natural expectorant என்பதால் சளியை வெளிக்கொண்டு வரும் தன்மையைக் கொண்டது. எனவே, பூண்டு டீ நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை குறைக்கும். மேலும் பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது.

பூண்டு டீ (Garlic tea) தயாரிப்பது எப்படி?

நாட்டுப்பூண்டு 2, தண்ணீர் 2 கப், எழுமிச்சை 1/2 மூடி, தேன் 1 தேக்கரண்டி, இஞ்சி, மஞ்சள், ஏலக்காய் தேவையான அளவு.

முதலில் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து நிறுத்தி விடவும். இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் 1/2 மூடி எழுமிச்சை சாற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும். இதனால் பூண்டு டீயின் சுவை நன்றாக மாறும்.

இதையும் படியுங்கள்:
சைலண்ட் கில்லர்: உள் உறுப்பைத் தாக்கும் கல்லீரல் அழற்சி - எச்சரிக்கை!
Garlic tea benefits

இந்த டீயை காலையில், வாரத்திற்கு இரண்டு முறை குடிக்கலாம். தினமும் குடிக்க வேண்டிய அவசியமில்லை. அல்சர் பிரச்னை இருப்பவர்கள், சென்சிட்வான வயிறு இருப்பவர்கள், குறைந்த ரத்த அழுத்தம், லோ சுகர் இருப்பவர்கள் பூண்டு டீயை தவிர்க்கவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com