காபியில் நெய் சேர்த்து குடித்தால் நடக்கும் அதிசயங்கள் ஆயிரம்! 

Ghee Coffee Benefits.
Ghee Coffee Benefits.

நம்மில் பலருக்கு காலையில் ஒரு சூடான காபி குடித்தால் மட்டுமே அந்த நாளை சிறப்பாக தொடங்குவது போன்ற உணர்வு கிடைக்கும். ஆனால் அதை வெறும் காபியாக மட்டுமே உட்கொள்ளாமல் அதில் ஒரு சில எளிய பொருட்களை சேர்ப்பது மூலமாக நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி தினசரி காலையில் காபி குடிக்கும் போது அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து குடித்தால் எதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆற்றலை அதிகரிக்கும்: சாதாரணமான காபி குடிப்பதற்கு பதில் அதில் கொஞ்சம் நெய் சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கிறது. நெய்யில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் விட்டமின்கள், நம் உடலுக்கு நீடித்த நிலையான ஆற்றலை வழங்கும். இது அந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். 

கூடுதல் சுவை: நெய் சேர்க்கப்பட்ட காபி சாதாரண காபியை விட கூடுதல் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குளிர்காலத்திற்கு நெய் சேர்த்து காஃபி குடிக்கும் போது இதமாக இருக்கும். நீங்கள் உங்கள் காபியின் சுவையை அதிகரிக்க விரும்பினால் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவும்: நெயில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்பு உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக செரிமானம் மேம்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். காபியுடன் நெய் சேர்த்து பருகும் போது, அது பசியை குறைத்து நாம் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால் இந்த நெய் காபி உங்களுக்கு உதவும். 

ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்கும்: நம் உடலுக்கு தினசரி எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறதோ, அதேபோல ஆரோக்கியக் கொழுப்பும் அவசியமான ஒன்றாகும். நெய், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 கொழுப்புச் சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது நம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
காபி பிரியர்களுக்கான சுவையான டெசர்ட்ஸ்!
Ghee Coffee Benefits.

இப்படி தினசரி உங்கள் காபியில் சிறு துளி நெய் கலந்து குடிக்கும்போது உங்களுக்குத் தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது. அதேபோல சிலருக்கு திடீரென உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதனால் சில விளைவுகள் ஏற்படலாம். எனவே இப்படி புதிதாக ஏதாவது முயற்சிக்கும்போது நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று மிதமாகத் தொடங்குவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com