
1. பசலைக்கீரையை பாசிப்பருப்புடன் வேக வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
2. மூக்கடைப்பு ஏற்பட்டால் மூக்கில் கடுகு எண்ணெய்யைத் தேய்க்க மூக்கைடைப்பு நீங்கும்.
3. இருபது கிராம் கொத்தமல்லியுடன் மூன்று கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
4. முருங்கைக்கீரையை அரைத்து வீக்கங்கள் மீது தடவி வர வீக்கங்கள் வற்றும்.
5. வேப்பண்ணையில் மஞ்சள் பொடி குழைத்துத் தடவி வர காலில் வரும் பித்த வெடிப்பு குணமாகும்.
6. நெற்றியில் குங்குமம் இட்ட இடத்தில் கறுப்புத் தழும்பு ஏற்பட்டால், துளசி இலையைத் தேங்காய்ப்பால் விட்டு அரைத்துப் பற்று போட மறையும்.
7. இஞ்சிச்சாறு, துளசிச்சாறு இரண்டையும் சேர்த்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
8. ஒரு பிடி கறிவேப்பிலை, நான்கு கடுக்காய் இரண்டையும் ஒன்றாக அரைத்துச் சாறு எடுத்து அதில் பாதி அளவுக்கு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தடவி வர முடி நன்றாக வளரும். பொடுகுத் தொல்லையும் நீங்கி விடும்.
9. முருங்கைக்கீரை காம்புகளை நறுக்கி ரசம் வைத்துச் சாப்பிட உடல் அசதி நீங்கி விடும்.
10. கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் வலி நீங்கி விடும்.
11. புதினாச்சாறு, தண்ணீர் இரண்டையும் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர, விரைவில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
12. காய்ச்சாத பசும்பாலில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து, கண்களின் கீழே பூசி, பின்பு குளிர்ந்த நீரால் கழுவினால் கருவளையம் மறையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)