மஞ்சள் பூசணி விதைகளிலிருக்கும் மகத்தான ஆரோக்கிய நன்மைகள்!

pumpkin seeds
pumpkin seedshttps://www.agiboo.com
Published on

நாம் சமையலுக்கு காய்கறிகள் வாங்கும்போது மற்ற காய்களுடன், கண்ணைக் கவரும் மங்கலகரமான மஞ்சள் நிறத்தில் வெட்டி வைத்திருக்கும் பூசணிக்காய் துண்டுகளில் ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை. இதை உபயோகித்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற உணவுகள் மட்டுமின்றி, பூசணி அல்வா போன்ற சுவையான இனிப்பும் தயாரிக்க முடியும். இக்காயில் நார்ச்சத்து போன்ற  ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இக்காயில் உள்ளது போலவே இதன் விதைகளிலும் அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்து உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம், சிங்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக, மக்னீசியமானது உயர் இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்த உதவும். இதனால் இதயம், கிட்னி, மற்றும் மூளையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஸ்ட்ரோக், நாள்பட்ட இதய நோய், சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் குறைபாடு போன்ற கோளாறுகள் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.

2. இதிலுள்ள சிங்க் என்ற கனிமச் சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச் செய்யும். இதனால் தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவாமல் தடுக்க முடியும். உடலில் உள்ள நோய்களும் விரைவில் குணமாகும்.

3. இவ்விதைகளில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியம் காக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். மேலும், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த பெரிதளவில் உதவி புரியும்.

4. பூசணி விதைகளில் அடங்கியுள்ள தாவர அடிப்படையிலான புரோட்டீன் சத்துக்கள் தசை வளர்ச்சிக்கும், சேதமடைந்த தசைகளின்  சீரமைப்பிற்கும் நல்ல முறையில் உதவுகின்றன.

5. இதிலுள்ள வைட்டமின் E மற்றும் கரோட்டினாய்ட் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. மேலும், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
நீங்கள் அதிகப்படியாக சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள்!
pumpkin seeds

6. இதிலிருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன. மேலும், குடல் இயக்கங்கள் சீராக செயல்படவும் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவி புரிகின்றன.

இத்தனை நன்மைகள் தரக்கூடிய பூசணி விதைகளை தூக்கி எறிந்துவிடாமல் சேமித்து வைப்போம். பின் அவற்றை கேசரி, பாயசம் போன்ற இனிப்பு வகைகளில் சேர்த்தும், மிக்ஸரில் கலந்தும் உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com