சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்...
நோய்களுக்கு மருந்துகளை உட்கொள்வதால் 50 சதவீத நோய் தான் குணமாகும். மீதமுள்ள 50 சதவீதம் நோயாளிகளின் தன்னம்பிக்கை மூலமே குணமாகிறது. எனவே வீட்டில் உள்ளவர்கள் நோயாளிகளின் தன்னம்பிக்கையை பாதிக்காத அளவு பேச வேண்டும். அவர்களது பேச்சு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்க வேண்டும்.
சரி, தன்னம்பிக்கையுடன் இருந்தாலோ அல்லது தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினாலோ நோய்கள் குறைந்துவிடுமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். இங்கிலாந்து நாட்டில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருந்துகளுடன் தன்னம்பிக்கை சிகிச்சை அளிப்பது மூலம் அவர்களின் நோய் தீவிரம் குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணமாக மருந்து மட்டுமே கொடுத்த நோயாளிகளுக்கு நோயின் கடுமை ஓரளவு குறைந்ததே தவிர வேகமாக குறையவில்லை.
வேலையிலும் சரி வெளியிலும் சரி, வீட்டிலும் சரி நம்மில் பலருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. மனதை சமநிலைப்படுத்தி வைக்க தெரியாத பலரும் இதற்கு ஆளாகின்றனர். மனதில் எப்போதும் நல்ல எண்ணம் வளர்ப்பது நல்லது. எதையும் நெகட்டிவ்வாக நினைக்க கூடாது. பாசிட்டிவான எண்ணங்களும் செயல்களும் நம் உடலில் எனர்ஜியை பரவச் செய்து 'நைட்ரிக் அமிலத்தை' உற்பத்தி செய்யும்.
அது ரத்த ஓட்டத்தை தடையில்லாமல் செய்வதுடன், ரத்த குழாய் சுவர்களில் கொலஸ்டிரால் படிவதையும் தடுக்கும்.
நெகட்டிவ் எண்ணம் மற்றும் செயல்களை கொண்டவர்களுக்கு நைட்ரிக் அமிலம் உற்பத்தியானாலும், ரத்த குழாய் சுவர்களில் பாதிப்பை ஏற்படுத்தி லேசாக கொலஸ்ட்ராலை படியச்செய்யும். இதுவே மாரடைப்பிற்கு காரணமாகிறது. எனவே மனதை எப்போதும் பாசிட்டிவ்வாக மற்றும் அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக இயங்கும் வாழ்க்கை முறையை சிறுவர்களாக இருக்கும் போது தேர்வு செய்வோர் எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக அவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
உங்கள் மனம் தான் உங்கள் ஆரோக்கியம், உங்கள் மனம் தான் உங்கள் நோய். நோய்களில் 70 சதவீதம் மனம் சம்பந்தப்பட்டவை தான். ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனதில் தான்.
நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும். உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக 70 சதவீத நோய்களை மாற்ற முடியும். உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம் தான் நடத்திச் செல்கிறது.
டாக்டரை சந்திப்பவர்களில் 75 சதவீதம் பேர், தங்களுக்கு நோய் வந்து விட்டதாக கற்பனையில் இருப்பவர்கள் தான். இந்த, பயத்தின் அறிகுறிகள் என்ன என்றால்,வியாதிக்குரிய அறிகுறிகள் தன்னிடம் தெரிவதாக நினைத்து கொள்வது. வியாதியைப் பற்றி பேசிப் பேசியே மனதை அதிலேயே வைத்துக் கொள்வது. நோய் சம்பந்தமான செய்திகளை படித்து, நமக்கு இப்படி ஆயிடுமோன்னு வேதனைப்படுவது. இதெல்லாம் தான். இதனை தவிர்க்க எப்போதும் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை கட்டுப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.
"நல்லதே நடக்கும் " என நம்பும் மனிதனின் வாழ்நாள் கூடும் என்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நல்லெண்ணம் உடலின் உயிரியல் அமைப்புகளுடன் நேரடித் தாக்கத்தை உண்டாக்குகிறது என்கிறார்கள். நீண்ட காலம் வாழ்வதற்கு நன்றாக சாப்பிடுவது மட்டும் போதாது. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எதையும் சாதகமாக எடுத்துக்கொண்டு "பாசிடிவ்"வாக அணுகக்கூடியவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பதை 160 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)