
அன்றாட வேலைகளோடு , நம் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ரெகுலராக நம் உடல் அவயங்களை கவனித்து வந்தாலே அதன் மாறுபாடுகளை கொண்டு நமக்கு வரப் போகும் நோயை ஓரளவு கணித்து விட முடியும்.
கை நகமானது நக அடுக்குகளில் இருந்து தளர்ந்து அல்லது பிரிந்து விடும் நிலை இருந்தால் அது ONYCHOLYSIS என்பர். இது பெரும்பாலும் கைகளின் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களில் ஏற்படும். ஒருவருக்கு தைராய்டு கோளாறுகள் இருந்தால் அது ONYCHOLYSIS எனும் கோளாறு இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
நகங்களில் அதிக இடைவெளி இருந்தால் அழுக்குகள் மற்றும் மண் நுழைந்து நகங்களில் நோய்களை ஏற்படுத்தும். அதே போல் நகங்களில் உட்குழிகள் விழுந்தாலும் தைராய்டு பிரச்னை உள்ளது என்பதை உணரலாம்.
நீரிழிவு இருந்தால் கை விரல்களின் நகங்கள் வெண்மை நிறத்தில் இருந்து மிதமான மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். நீரிழிவு நோயானது சருமம் மற்றும் நகங்களில் தெரியும் நிறத்தை மாற்றுகிறது. நகங்களில் collagen protein உடன் குளுக்கோஸ் இணைந்திருப்பதால் தான் நகங்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது.
நகங்களில் மஞ்சள் நிறமும் அதிக தாகமும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
சிலருக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் நகங்கள் வெள்ளை நிறமாக காணப்படும்.குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டால் நகங்கள் வெள்ளை நிறமாக வெளுத்து போயிருக்கும்.
நகங்கள் பலவீனமாக இருந்தால் OSTEOARTHRITIS எனும் மூட்டு வலி க்கான அறிகுறிகள் காட்டும். நகங்களில் சிறிய குழிகள் அல்லது வரிகள் இருந்தால் அது PSORIATIC ARTHRITIS என்ற நோய் தாக்கம் உள்ளது என அறியலாம்.
நகங்களின் அடித்தளத்தில் சிவப்பு நிற பிறை போன்ற வடிவம் தோன்றினால் RHEUMATOID ARTHRITIS இருக்க வாய்ப்புண்டு. அதே போல் நகங்கள் தானாகவே சிதைந்து, உடைந்து உதிர்வதை ONYCHOMADESIS என்பர். இவற்றிற்கெல்லாம் தீர்வாக மூட்டுக்கான மருத்துவரை அணுக வேண்டும்.
மெலனோமா (MELANOMA) என்பது புற்றுநோய் வகையைச் சேர்ந்தது. சூரியனின் புற ஊதாக் கதிர்களின் மூலம் வருகிறது. சரும செல்களின் DNA க்களை சிதைத்து விடுவதால் இந்த சரும புற்றுநோய் வருகிறது. சருமத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களை விட மிகவும் கொடிய புற்றுநோயான acral lentiginous melanoma எலும்பு புற்றுநோயாகும். இந்த நோய் விரல்களில் கருந்திட்டுக்களையும், கருப்பு கோடுகளாகவும் அறிகுறி காட்டுகிறது. இவற்றை சரும மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம்.
நகங்கள் அடர் நீலமாக இருந்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்னை உள்ளது என்பதை உணரலாம். ஆஸ்த்துமா, நிமோனியா சுவாச கோளாறுகள் இருப்பின் நகங்கள் அடர் நீலமாக இருக்கும்.
இவ்வாறு நகங்கள் காட்டும் அறிகுறிகளை வைத்து நோயின் தன்மை அறிந்து மருத்துவ சிகிச்சை பெற ஆரோக்கியத்தை காக்கலாம்.