கறுத்து வளைந்த நகங்கள்... மரபணு காரணமா?

கால் மற்றும் கைகளில் உள்ள நகங்கள் கறுத்து வளைந்து இருப்பதற்கான முக்கிய காரணங்கங்களையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
Nail care
Nail care
Published on

கால் மற்றும் கைகளில் உள்ள நகங்கள் கறுத்து வளைந்து இருந்தால் இது ஒரு மருத்துவரை நேரில் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டிய உடல் அடையாளம் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.

1.இரத்தத்தில் ஒட்டுமொத்த ஆக்சிஜன் குறைபாடு: மூச்சுத் திணறல், இருதயக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நகங்கள் வளைந்து, கறுத்து காணப்படும். இது clubbing of nails எனப்படுகிறது.

தீர்வு: உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து அடிப்படை நோய்க்கு சிகிச்சை பெற்றாலே நகங்களும் நிதானமாக பழைய நிலைக்குத் திரும்பும்.

2.இரும்புச்சத்து குறைபாடு: நகங்கள் மெலிந்து, வளைந்து, மேற்பரப்பு குழிந்தபடி காணப்படும். சில நேரங்களில் koilonychia (spoon-shaped nails) என்று அழைக்கப்படுகிறது.

தீர்வு: இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் (வாழைப்பழம், முருங்கைக்கீரை, சிறுதானியம், கம்பு, கருப்பட்டி) மருத்துவரின் ஆலோசனையுடன் Iron supplement, Vitamin C உடன் iron எடுத்தால் உறிஞ்சல் அதிகரிக்கும் (மாதுளை, நாரத்தை, எலுமிச்சை).

3. (வயிற்று நோய்கள் / சிறுநீரக கோளாறுகள்): சிறுநீரக செயலிழப்பு அல்லது கல்லீரல் நோய்களில், நகங்களில் நிறமாற்றம், கறுப்பு விளிம்புகள், வளைந்த நிலை உருவாகலாம். Terry’s nails அல்லது Muehrckes lines போன்ற நக மாற்றங்கள் தெரியும்.

4. நீர் மற்றும் சத்துக் குறைபாடு: B12, Vitamin C, D, Zinc குறைபாடுகள் நகங்களை வளைத்தும், உடைத்தும், கறுத்தும் மாற்றலாம்.

தீர்வு: தினசரி போதுமான நீர் (2–3 லிட்டர்) அருந்த வேண்டும். ஒவ்வொரு உணவும் சமநிலை உணவாக இருக்க வேண்டும் (காய்கறி, பழங்கள், புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு). உடல் பருமன் இருந்தால் குறைக்கும் நடவடிக்கைகள் பால், முட்டை, மீன், நாட்டு கோழி, வேர்க்கடலை, பச்சை கீரைகள். தேவையான நிலையில் மருத்துவர் multivitamin அல்லது B-complex supplements அளிக்கலாம். Vitamin D சூரிய ஒளியில் காலை 7–9 மணிக்குள் 20 நிமிடம் நடைபயிற்சி செய்யலாம்.

5. தொடர்ந்த அழுத்தம் அல்லது பயிற்சி: கால்களில் காலணியின் அழுத்தம், கைப்பணிகளால் ஏற்படும் தொடர் அழுத்தம், நகங்களில் வளைந்த தன்மையை உண்டாக்கும். குறிப்பாக toenails அடிக்கடி கறுத்து மற்றும் தடிமனாக மாறலாம்.

தீர்வு: கால்களை வாரம் 2 முறை வெந்நீரில் கழுவி, நகங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்யவும். உறுத்தாத கம்பளி காலணிகள், கால் விரல்களுக்கு இடைவெளி இருக்கும்படி footwear அணியலாம்.

6. பூஞ்சை தொற்று: கால் நகங்களில் பொதுவாக தோன்றும் பூஞ்சை தொற்று நகங்களை தடிமனாக்கும், வளைக்கும். மங்கலான நிறம் அல்லது கருப்பு போன்ற நிறத்தில் காணப்படும்.

தீர்வு: சரும மருத்துவரை (Dermatologist) பார்க்கவும். Antifungal ointment / tablets தேவைப்படும். நகங்களை சுத்தமாக வைக்கவும், ஈரமாக வைக்கவேண்டாம் பாதங்களை காற்றோட்டமாக வைக்கவும்.

7. மரபணு காரணம்: சிலருக்கு பிறவியிலேயே நகங்கள் (வலிமையுடன்) வளைந்து காணப்படலாம். இது நோயன்று, ஆனால் வேறுபாடாகும்.

8. தொற்று அல்லது சிகிச்சை பக்கவிளைவுகள்: குறிப்பாக சாம்பல் மருந்துகள், சில புற்றுநோய் சிகிச்சைகள் (chemotherapy), ஹார்மோன் மாற்றங்கள்.

அதற்காக செய்யவேண்டியது ரத்த பரிசோதனை (CBC, Iron, Vitamin levels) Thyroid, Kidney, Liver function test, Dermatologist அல்லது General physician ஒருவரிடம் நேரில் பரிசோதனை.

இதையும் படியுங்கள்:
நகங்களை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள்!
Nail care

பொதுவான பராமரிப்பு முறைகள்

நகங்களை அடிக்கடி குறுக்காமல், சற்று நீளமாக வைத்திருப்பது நல்லது.

ரப்பர் கையுறைகள் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.

வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும்.

நல்லசுத்தம் + பச்சைஉணவு + தினசரி ஓய்வுடன் வாழ்வியல் தேவை.

முக்கியமாக மருத்துவரை நேரில் பார்க்காமல் வீட்டில் சிகிச்சை செய்ய வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com