நம் உடலைப் பார்த்து நாம் தினமும் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

நம் உடலைப் பார்த்து நாம் தினமும் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

ண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கும்போது, ‘என்ன சௌக்கியமா?’ என்று கேட்கிறோம் அல்லவா? அதேபோல, தினமும் நமது உடலைப் பார்த்தும் அப்படிக் கேட்க வேண்டும். ‘நமது உடலை நாமே எப்படி விசாரிப்பது?’ என யோசிக்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்! தினமும் உங்கள் உடலைப் பார்த்து நீங்கள் கீழே உள்ள ஐந்து கேள்விகளைக் கேளுங்கள்.

1. தினமும் மூச்சிறைக்கும்படி 20 நிமிடங்களுக்கு ஏதாவது வேலை அல்லது விளையாட்டில் ஈடுபடுகிறீர்களா?

2. நின்ற நிலையிலிருந்து தரையில் அல்லது நாற்காலியில் அமர முயற்சி செய்யுங்கள். கைகளை ஊன்றாமல் கடைசி வரை உடலை இறக்க முடிகிறதா? (அல்லது கடைசி அரை அடியில் தொப்பென்று விழாமல் இருக்கிறீர்களா?)

3. எதையும் பிடித்துக்கொள்ளாமல் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு இரண்டு கண்களையும் மூடிக்கொள்ளுங்கள். ஒரு நிமிஷமாவது ஆடாமல் அசையாமல் நிற்க முடிகிறதா?

4. மேல்நோக்கிப் படுத்துக்கொண்டு முதலில் முழங்கால்களை மடித்துப் பாதங்களைத் தரையில் பதிய வையுங்கள். அடுத்து ஒரு காலை நீட்டி நேராக்கி வானத்துக்கு உயர்த்துங்கள். அதேபோல, மற்ற காலையும் செய்யுங்கள். இப்படிச் செய்ய முடிகிறதா?

5. தசைகளை இறுக்கி, நீட்டி உறுதிப்படுத்துகிற விதமாக ஏதாவது வேலை அல்லது உடற்பயிற்சி செய்கிறீர்களா? (கிணற்றிலிருந்து குடம் குடமாக நீர் இறைத்தாலும் சரி.)

இந்த ஒவ்வொரு கேள்விக்கும், ‘முடியும்’ என்ற பதிலுக்கு 20  மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் உங்களின் விடைகளைப் பொறுத்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள். 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைத்தால் உங்கள் உடம்பு நலமே. குறைந்தால் உரிய நடவடிக்கைக்கு உடனே ஆயத்தமாகுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com