ஜிம்முக்கு போகாமலே ஜம்முனு ஆகணுமா? இந்த இரண்டு விஷயங்கள் போதும்!

ஜிம்முக்கு போகாமலே ஜம்முனு ஆகணுமா? இந்த இரண்டு விஷயங்கள் போதும்!

ல்லோருக்குமே அதிக பருமனில்லாத சிக்கென்ற உடலைப் பெற ஆசையுண்டு. எவ்வளவுதான் டயட் அது இது என்று இருந்தாலும், இந்த ஆசை மட்டும் நிராசையாய் போவதுண்டு. எல்லோரும் சாதாரணமாக சொல்வாங்க, ‘உடற்பயிற்சி செய்யுங்க’ என்று. ஆனால், அதற்கு சூழல் ஒத்துழைக்க வேண்டுமே. காலை முதல் இரவு வரை பரபரவென்று இருக்கும்போது உடற்பயிற்சியாவது ஒன்றாவது? அதுக்கு ஏது நேரம்? அதையும் மீறி ஜிம்முக்கு போகிறவர்கள் வளைந்து நெளிந்து செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்டு வெறுத்துப்போய், ‘என்னால் முடியாதுப்பா’ என்று சோர்ந்துபோவதும் உண்டு.

சரி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு உங்க மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது. உங்களுக்குத் தெரிந்த இந்த இரண்டு விஷயங்களை தொடர்ந்து செய்தாலே கண்டிப்பாக உங்களால் ஜிம்முக்கு போகாமலேயே மெல்லிடை மேனி கொண்ட மங்கையராய் வலம் வர முடியும். அவை:

யோகா: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் செயற்கையை தவிர்த்து, எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி. யோகாவின் உதவியால் உடலை கட்டுக்குலையாமல் காப்பாற்ற முடியும். யோகாசன பயிற்சி உடல் எடையை கண்டிப்பாகக் குறைப்பதுடன், உடல் உறுப்புகளையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

மூச்சுப் பயிற்சிகள் சுவாசம் சீராக இயங்க உதவும். மற்ற பயிற்சிகளை விட யோகாவில் மட்டுமே ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகைப் பாதுகாப்பதோடு, உடலையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.

நீங்கள் எந்த அளவுக்கு எத்தனை நிமிடத்துக்கு யோகாசனம் செய்கிறீர்களோ, அதை பொறுத்துதான் உங்கள் உடல் எடையும் குறையும். சூரிய நமஸ்காரம் செய்வதனால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் சரியான முறையில் இயங்க வைக்க முடியும். பச்சிமோத்தாசனம் மற்றும் யோகமித்ரா ஆசனம் ஆகியவற்றைச் செய்வதால் வயிறு நன்றாகக் குறையும். ஆனால், இதுபோன்ற எளிய, நமக்கு ஏற்ற ஆசனங்களை அதற்கேற்ற நிபுணரிடம் ஒரு முறை கற்றுக்கொண்டு அதை மட்டும் வீட்டில் செய்து வாருங்கள். நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்வது முக்கியம்.

நடனம்: நடனத்தை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. ஆரம்பத்தில் நமது உடல் எடையுடன் கூடிய நடனம் நமக்கு அழுத்தத்தையே தரும். ஆனால், போகப்போக உடல் எடை குறைந்து யோகாவுடன் நடனமும் சேரும்போது, உடல் லேசாக மாறுவதைக் கண்டு மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும், நடனம் ஆடும்போது நமது மனம் ஒருமுகப்பட்டு அத்தனை கவலைகளையும் மறந்து, நமது உடல் நலமும் மனநலமும் பொலிவுடன் இருப்பதற்கு முக்கியக் காரணமாகிறது. யோகாவினால் கிடைக்கும் அத்தனை நலன்களும் நமக்கு பிடித்த நடனங்களை ஆடுவதிலும் கிடைக்கிறது எனலாம்.

முக்கியமான விஷயம் காதைக் கொண்டாங்க. மறக்காமல் சற்றே சரிவிகித சத்துகள் உள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நீங்களும் மெல்லிடை மங்கைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com