ஆயுள் வரை ஆரோக்கியம் சாத்தியமே!

ஆயுள் வரை ஆரோக்கியம் சாத்தியமே!

ன அழுத்தம் என்பது மனிதர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும், அதைத் தொடர விடக்கூடாது. மன அழுத்தம் தொடர்ந்தால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். பணிச்சுமை, குடும்பப் பிரச்னை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்வு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மன அழுத்தத்தைக் குறைப்பது என்பது சவால்கள் நிறைந்தது. சில நடைமுறைகளைப் பின்பற்றினால் நாம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலைப்படுவதால் மனச்சோர்வு அதிரிக்கரிக்கிறது. அதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. முதலில் எதிர்மறையான சிந்தனைகளை கைவிட வேண்டும். யோகா செய்வதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தினால் மன அழுத்தம் குறையும். யோகா மற்றும் தியானம் நமக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் சென்று தங்கியிருந்து நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளில் ஒன்று. தனிமை என்னும் நோயை விரட்ட, மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், மன அழுத்தம் குறையும்.

எந்த வேலையையும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமாகும். எனவே, எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். அதே நேரத்தில் அதிக பணிச்சுமையையும் தவிர்த்திடுங்கள். எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாதீர்கள்.

அதிக நேரம் செல்போன்களில் மனதை செலுத்துவது, கம்யூட்டர் மற்றும் மடிக்கணினிகளில் அதிக நேரம் செலவிட்டு தேவையில்லாத விஷயங்களைப் பார்ப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். குழந்தைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி அதிக நேரம் டி.வி. பார்ப்பது, ஸ்மார்ட் போன்களை வைத்து விளையாடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவற்றை நீண்ட நேரம் பார்ப்பது உங்களது தூக்கத்தைக் கெடுத்து மனதை பாதிக்கலாம்.

உங்களுக்குத் தேவையான உணவுகளை உண்பது, தியானம், யோகா செய்வது, இசையைக் கேட்பது, இயற்கை சூழலில் நடந்து செல்வது, பிடித்தமான புத்தகங்களைப் படிப்பது, நல்ல தூக்கம் இவையே மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com