
ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதி தானியங்கள். அவற்றில் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. அரிசியும் அத்தகைய தானியங்களில் ஒன்றாகும். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால், உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நாம் உண்ணும் அரிசி வகைகளில் வெள்ளை அரிசியின் சுவையும் மணமும் மிக நன்றாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். வீட்டில் சமைக்கப்படும் அரிசி சாதம் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காது என்று நினைத்தால் அது தவறு.
தினமும் அரிசி சாதத்தை தொடர்ந்து அதிகமாக உட்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதலை விளைவிக்கும்.
வெள்ளை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உடல் எடை அதிகரிக்கும். அரிசியில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. மேலும், அரிசி சாதத்தை சாப்பிட்ட பிறகு மீண்டும் விரைவாக பசியை உணர்வீர்கள். இதன் காரணமாக அதிகமாக சாப்பிடும் ஆபத்தும் இருக்கிறது. அதேநேரத்தில் அரிசி சாதத்தை சாப்பிடும் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்க முடியும்.
வெள்ளை அரிசி சாதத்தை தினசரி சாப்பிடுவதால் நேரடியாக அதிக கொலஸ்ட்ரால் ஏற்படாது. ஆனால், இதனை தினமும் சாப்பிட்டால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் ட்ரைகிளிசரைடு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசியை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது நீரிழிவு நோயை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள், தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை வேகமாக உயரும். இதய நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை சர்க்கரையைப் போலவே, வெள்ளை அரிசியும் இதயத்துக்கு எதிரி. குறிப்பாக, தினமும் அரிசி சாப்பிடுபவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தினசரி வெள்ளை அரிசி சாதத்தை சாப்பிடுவது உங்கள் உடல் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு பின்பற்றலாம்.