Broccoli Vs Cauliflower
Broccoli Vs Cauliflower

ப்ரோக்கோலி Vs காலிஃபிளவர் : இரண்டில் எது சிறந்தது?

Published on

சமீப காலமாக வெளிநாட்டு காய்கறிகளான காலிஃபிளவர், ப்ரோக்கோலி ஆகியவற்றை உண்ணும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இரண்டில் எதை சாப்பிடுவது என்ற கேள்வி உள்ளது. இரண்டும் வேறு வேறு மணமும் சுவையும் கொண்டிருப்பதால், அதற்கு தகுந்தாற்போல் சமைப்பது சிறப்பு. வெளிநாட்டு உணவு முறைகளில் காலிபிளவர், ப்ரோக்கலி இரண்டையும் சேர்த்தே சமைக்கின்றனர். ஆனால், இந்தியர்கள் மாறுபட்ட சுவையின் காரணமாக, பெரும்பாலும் இரண்டையும் சேர்த்து சமைப்பதில்லை.

ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர்:

இரண்டுமே சாப்பிட்டால் உடலுக்கு நம்மை பயக்கும். இரண்டுமே நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு நபரும் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு சரியான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி:

காலிபிளவர் நம் அனைவருக்கும் முன்பே நன்கு பரிச்சயமானது. ப்ரோக்கோலி பார்ப்பதற்கு காலிஃபிளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும். இந்த காய்கறி ஒரு சிறப்பு வகை காலிஃபிளவர் ஆகும். சமீபகாலமாக, இந்த காய்கறியை உண்ணும் போக்கு ஆரோக்கிய உணர்வுள்ள மக்களிடையே அதிகரித்துள்ளது. 

முதலில் ப்ரோக்கோலியில் உள்ள நன்மைகளை அறிவோம். ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைந்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ப்ரோக்கோலியில் வைட்டமின் கே உள்ளதால், அதை அடிக்கடி உணவில் சேர்ப்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் ஈரப்பதத்தை நிலைப்படுத்தி, சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. ப்ரோக்கோலியில் ஆக்ஸிஜனேற்ற ஹார்மோன்கள் உற்பத்தி ஆகி மனஅழுத்தத்தைக் குறைக்கவும், சோர்வை நீக்கவும் உதவுகிறது.

காலிபிளவர்:

காலிஃபிளவரில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளது. எனவே இந்த காய்கறியை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பலருக்கு இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளது. ஆனால் காலிஃபிளவர் அந்த கட்டிகளை தடுக்க உதவுகிறது. காலிபிளவர் முளையின் செயல்பாட்டிற்கு அதிகம் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கவும், தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் காலிஃபிளவர் உதவுகிறது.

காலிஃபிளவரில் உள்ள கோலின் தூக்கமின்மைக்கு சிறந்த பலன் அளிக்கும். நல்ல ஆழமான தூக்கத்திற்கு இது உதவுகிறது. காலிபிளவர் புற்று நோயின் ஆபாயத்தைக் குறைக்கிறது. இதை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றை நீக்க பயன்படுத்தலாம். இரத்தக் கட்டு, வீக்கம் ஆகியவற்றை குறைப்பதிலும் இத் முக்கிய பங்கை வகிக்கிறது. சுவை அளவில் இது ப்ராக்கோலியை விட சிறப்பானது. 

இதையும் படியுங்கள்:
வெண்டைக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 உணவுகள்!
Broccoli Vs Cauliflower

பொதுவாக இதய நோய் உள்ளவர்கள், எலும்பு பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு , உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, வைட்டமின்கள் அல்லது நார்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ப்ரோக்கோலி சரியான தேர்வு ஆகும்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள், இரத்தம் உறைதல் பிரச்சனை, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு காலிபிளவர் நல்ல தேர்வாக இருக்கும் .

ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றை உட்கொள்ளும் முன்னர் அதை சுத்தமாக பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். இந்த இரண்டையுமே வெந்நீர் வைத்து அதில் நன்கு கழுவி, அலசிய பின்னர் பயன்படுத்தவும். காரணம் இரண்டிலும் சிறிய அளவில் புழுக்கள் இருக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com