செல்டிக் உப்பின் ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரியுமா?

Celtic salt
Celtic salt
Published on

ஃப்ரான்ஸ் கடற்கரை பகுதியில் கிடைக்கும் செல்டிக் உப்பு மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இதில் 80 விதமான மினரல் சத்துக்கள் உள்ளன.

செல்டிக் உப்பின் நன்மைகள்

தண்ணீரில் சிறிது செல்டிக் உப்பு சேர்த்து அருந்துவதால் உடல் நல்ல நீரேற்றத்துடன் இருக்கும். இதில் சோடியம் இருப்பதால் உடல் நீரை சமப்படுத்தும். இது அதிக உஷ்ணத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கக் கூடியது.

நம் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு  எலெக்ட்ரோலைட்ஸ் மிக அவசியமாக இருக்கிறது. உடற்பயிற்சி முடிந்த பிறகு  எலக்ட்ரோ லைட் நிறைந்த செல்டிக் உப்பு சேர்த்து நீரைக் குடிப்பது சோர்வை நீக்கும்.

நம் உடலுக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம், கால்சியம் போன்றவை செல்டிக் உப்பில் இருப்பதால் அதை நீரில் கலந்து குடிப்பது ஆரோக்கியமானது. 

சிலருக்கு வயிற்று உப்புசம், செரிமான கோளாறுகள் இருக்கும். செல்டிக் உப்பில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. 

பதப்படுத்தப்பட்ட உப்புகளை விட செல்டிக் உப்பில் இயற்கையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் சோடியம் அளவை சீராக வைத்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

செல்டிக் உப்பு கலந்த நீர், உடல் நச்சுக்களை நீக்க உதவுகிறது. இந்த உப்பின் சத்துக்கள் சிறு நீரகம் நன்றாக செயல்பட  உதவுகிறது. இதன் எலெக்ட்ரோலைட்ஸ்  நச்சுக்களை நீக்குவதால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகிறது.

உடல் சக்தியை அதிகரிக்க செல்டிக் உப்பின் மக்னீசியம் உதவிபுரிகிறது. நம் சக்திகளை ஊக்குவிக்கும் அட்ரினல் க்ளான்டுகளை செல்டிக் உப்பு  ஊக்குவிப்பதால், சக்தி மேம்படுத்தப்படுகிறது.  உடலளவிலும் மற்றும் மனதளவிலும் ஏற்படும் சக்தி, விரயமாவதைத் தடுக்கிறது.  

இந்த நீர் உப்பின் சுவையோடு இருந்தாலும் உடல் பிஹெச் அளவை சமன் படுத்துகிறது. இந்த உப்பில் உள்ள பண்பு அழற்சியை போக்கி உடலின் காரத்தன்மையை தக்க வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சமையலை எளிதாக்கும் சுவையான 4 பொடி வகைகள்!
Celtic salt

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com