கோகோ பீன்களும் மகாடாமியா கொட்டைகளும்... நன்மைகள் என்னென்ன தெரிஞ்சுக்கலாமா?

ocoa beans and macadamia nuts
ocoa beans and macadamia nuts
Published on

சாக்லேட்டின் முக்கியப் பொருளான கோகோ:

கோகோ மரத்தின் கோகோ பழம்தான் கடவுளின் உணவு என்று அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் மத்திய அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

சாக்லேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இன்சுலின் மற்றும் லிபிட் மெடபாலிசம் போன்றவற்றிலும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. சாக்லேட்டின் சரித்திரப்படி தென் அமெரிக்காவில் முதல் முதலாக வாழ்ந்த 'மாயா' என்ற இன மக்கள் சுடுநீரில் கோகோவை கலந்து தயாரித்தார்கள். இதில் மிளகு மற்றும் பட்டையும் சேர்த்தார்கள். கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதல் முதலாக கோகோவை சுவைத்தார்.

சாக்லேட்டின் முக்கியப் பொருளான கோகோவில் 40 சதவீதம் கோகோ வெண்ணையும், 33 சதவீதம் ஒலிக் அமிலமும் 25 சதவீதம் பால்மிடிக் அமிலமும் 33 சதவீதம் ஸ்டியரிங் அமிலமும் உள்ளன.

இதன் நன்மைகள்:

இதில் உள்ள ஃப்ளேவினாய்டுகள் ஆக்சிடேடிவ் அழுத்தத்தை எதிர்த்து, அழற்சியை போக்கி திசுக்களை பாதுகாக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொலஸ்டிராலை‌க் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கோகோவில் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன் மற்றும் செரடோனின் போன்றவை தூண்டப்பட்டு, மனச்சோர்வு பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது.

கோகோவில் ஞாபக சக்தியைத் தூண்டக் கூடிய ஃப்ளேவினாய்டுகள் உள்ளன. அல்சீமியர் மற்றும் டெமன்ஷியா நோய்கள் தடுக்கப்படுகின்றன.

மேலும் கோகோவில் புற ஊதாக் கதிரில் இருந்து பாதுகாக்கக் கூடிய மூலக் கூறுகள் உள்ளதால் சருமத்தில் நீரேற்றம் அதிகமாகி சருமம் பாதுகாக்கப்படுகிறது.

கோகோவில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைவாக ப்ரீபயாடிக்காக இருப்பதால் எடைக் குறைப்பில் உதவுகிறது.

கோகோவில் தியோப்ரோமைன் என்ற சக்தி ஊட்டக்கூடிய பொருள் உள்ளது.

சாக்லேட்களில் ப்ரீபயோடிக் மற்றும் ப்ரோபயோடிக்ஸ் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

மகாடாமியா: கொட்டைகளின் ராணி:

மகாடாமியா கொட்டைகள் வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தவை. இவை எடைக் குறைப்பு, நீரிழிவு, குடல் மற்றும் இதயநோய்களுக்கு எதிராக பாதுகாப்பானது.  ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. மகாடாமியா கொட்டைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அவசரம் அவசரமா சாப்பிடுபவரா நீங்க? இந்த கதையை படிச்சுட்டாவது திருந்துங்க!
ocoa beans and macadamia nuts

இதன் நன்மைகள்:

இதய ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தது. மோனோசாச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்த இது, எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம் படுத்துகிறது.

இந்த கொட்டையில் வைட்டமின் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை நீக்கி, நாள் பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. 

கலோரிகள் நிறைந்ததாக இருந்தாலும் எடை மேலாண்மைக்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்வதில் வயிறு முழுமையான உணர்வைத் தருகிறது. அதிகப் படியான உணவு உட்கொள்வதைத் கட்டுப்படுத்தும். 

இதில் வைட்டமின் பி1, மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமம் மற்றும் முடிக்கு பளபளப்பு அளிக்கிறது. இது புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. வயதான தோற்றத்தைக் குறைக்கிறது. 

இது இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இதன் ஆரோக்கிய கொழுப்புகள் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. 

நார்சத்து நிரம்பிய மகாடாமியா கொட்டைகள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தீர்த்து குடல் ஆரோக்கியத்தை மேம் படுத்துகிறது.

இந்தக் கொட்டையில் உள்ள மோனோசாசுரேடட் கொழுப்புகள் மூளையின் செயல்பாட்டை  ஊக்குவிக்கின்றன.

காய்கறிகளுடன் மகாடாமியா கொட்டைகளை சேர்ப்பதால் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தும்.

இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அல்சீமியர் நோயைத் தடுக்கிறது.

இக்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஒமேகா 6 லினோலிக் அமிலம் கொண்டது. எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு ஏற்றது. இது சரும சுருக்கத்தை போக்குகிறது.

இக்கொட்டையின் எண்ணெய் தீக்காயம் மற்றும் புண்களை குணப்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
தாமிர பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா? கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!
ocoa beans and macadamia nuts

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com