நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு, யூரிக் ஆசிட் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சி.பி.ஏ. மற்றும் ஜி.ஏ.டி. ஜூஸ் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சி.பி.ஏ. (Cucumber, Pudhina and Amla):
ஒரு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு நெல்லிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பத்து புதினா இலைகளை சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத் தெடுத்தால் சி.பி.ஏ ஜூஸ் ரெடி.
வெள்ளரியில் உள்ள பெக்டின் என்னும் கரையக் கூடிய நார்ச்சத்து LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதிலுள்ள ஸ்டெரோல்ஸ் என்னும் கூட்டுப்பொருள், கொழுப்பு உடலுக்குள் உறிஞ்சப்படும் அளவைக் குறைக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C, K போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்.
புதினாவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவி புரிந்து இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கின்றன. மேலும் புதினாவில் உள்ள வைட்டமின் C சத்து மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் பருக்களை நீக்கவும் பள பள சருமம் பெறவும் உதவுகின்றன. புதினா ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸை குறைத்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C சத்து ஆகியவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மற்றும் வைட்டமின் C, உடலில் உள்ள அதிகளவு யூரிக் ஆசிடை வெளியேற்ற உதவுகின்றன. ஆம்லா இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும் உதவும்.
ஜி.ஏ.டி. (Ginger, Amla and Turmeric) ஜூஸ் :
இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் மற்றும் ஷோகால் போன்ற கூட்டுப் பொருட்கள் கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசெரைட்களின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து இதய ஆரோக்கியம் மேம்படவும் இஞ்சி உதவும். இஞ்சியின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் டையூரெடிக் குணங்கள் உடலில் அதிகளவில் உள்ள யூரிக் ஆசிடை வெளியேற்றவும் மூட்டு வலியை குறைக்கவும் உதவும். இஞ்சி இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்தத்தில் சேரும் அதிகளவு சர்க்கரையை குறையச் செய்யவும் உதவும்.
ஆம்லாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசெரைட்களின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதன் டையூரெடிக் குணம் கிட்னியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற ஆக்ட்டிவ் காம்பௌண்ட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த நாளங்களில் ப்ளேக்குகள் உண்டாவதைத் தடுக்கிறது. மஞ்சளின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் அதிகப்படியாய் உள்ள யூரிக் ஆசிட் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.