மோர் புளிப்பான சுவைக்கொண்ட புத்துணர்ச்சி தரக்கூடிய ஆரோக்கியமான பானமாகும். பாலை புளிக்க வைப்பதன் மூலமாக தயிர், மோர் போன்றவை கிடைக்கின்றது. இதில் ப்ரோபையாடிக், வைட்டமின், அமினோ ஆசிட், மினரல் போன்ற சத்துகள் இருக்கின்றன. இத்தகைய சிறப்புகள் கொண்ட மோரை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தினமும் மோர் குடிப்பதால் உடலுக்கு தேவையான பாஸ்பரஸ், கேல்சியம், ப்ரோபையாடிக் கிடைக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை எப்போதும் பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மோரில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. மோர் குடிப்பதால் குடலில் நல்ல பேக்டீரியாக்களை அதிகரிக்க செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் மோரில் உள்ள புளிப்புத்தன்மை லாக்டோஸை சர்க்கரையாக மாற்றி ஜீரணத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி போன்ற ஜீரணக்கோளாறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வாக மோரை எடுத்துக்கொள்ளலாம். இது வயிற்றில் உருவாகும் அமிலத்தை மட்டுப்படுத்தி நெஞ்செரிச்சல், அஜீரணத்தை குணப்படுத்துகிறது.
4. ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் பசியுணர்வு நன்றாக கட்டுப்படுத்தப்படும். மோரில் உள்ள சத்துகள் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள குறைந்த கலோரிகளும், அதிகமான புரதமும் உள்ளது. இதை எடுத்துக்கொள்ளும் போது வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து உணவை அதிகம் சாப்பிடுவதை குறைப்பதால் உடல் எடை குறைய மிகவும் உதவுகிறது.
5. தினமும் மோர் குடிப்பது நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெயில் காலங்களில் மோர் எடுத்துக்கொள்வது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் போன்ற electrolytes உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
6. மோரில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான கேல்சியம், புரதம் வைட்டமின் B12, Riboflavin இருக்கின்றன. இது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் Osteoporosis, பல் சம்மந்தமான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது.
எனவே, இனி தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.