வெல்லம் + மிளகு = ஆரோக்கிய கலவை! சாப்பிட்டால் இல்லை கவலை!

வெல்லம் + மிளகு
வெல்லம் + மிளகு
Published on

இனிப்பு மிகுந்த வெல்லமும் காரம் நிறைந்த மிளகும் சேர்த்து சாப்பிடும் போது நமது ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளை வழங்குகிறது. வெல்லம் மற்றும் கருப்பு மிளகு ஒரு ஆரோக்கியமான கலவையாகும். இது உடலுக்கு வலிமை தருவது மட்டுமல்லாமல் நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இவற்றை ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்யலாம். ஆரோக்கியமாக இருக்க, ஒரு ஸ்பூன் வெல்லத்தில் இரண்டு அல்லது மூன்று மிளகினை பொடியாக்கி சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடியுங்கள்.

நோய் எதிர்ப்பு :

கருப்பு மிளகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மிளகில் உள்ள பைப்பரின் என்ற வேதிப்பொருள் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் எளிதில் கிடைக்கும். இது தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இரும்புச்சத்து உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.

வெல்லம் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வெல்லம் மற்றும் மிளகு ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடுவதால் சளி, இருமல் மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து விடுபடலாம்.

தொண்டைப்புண்:

வெல்லம் தொண்டையில் உள்ள புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தொண்டை புண்ணை சரி செய்கின்றன. தொண்டை வலியில் இருந்து இதமளிக்கிறது. பாலில் தினமும் வெல்லம் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக குடித்து வந்தால் இருமல் குறையும் சளித்தொல்லை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டவுடன் நம் நாக்கு ஏன் இனிப்பை தேடுகிறது?
வெல்லம் + மிளகு

செரிமானம்:

வெல்லம் இயற்கையான நச்சு நீக்கியாக உள்ளது. இது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலங்களில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குவதில் கருப்பு மிளகு உதவியாக இருக்கும். இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவது அமிலத் தன்மையைக் குறைத்து உணவை விரைவாக செரிக்க வைக்கிறது.

இரத்த சோகை:

வெல்லத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கருப்பு மிளகு இரும்புச்சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது; ஊட்டச்சத்துகள் இழப்பின்றி உடலுக்கு கிடைக்கிறது. அதனால் உடலில் தேவையான இரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெல்லம் , மிளகில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. மேலும் இரத்த ஓட்டம் மேம்படுவதால், சருமமும் பளபளப்பாகத் மாறத் தொடங்கும்.

மூட்டுவலி:

வெல்லத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. கால்சியம் எலும்பு வலுவாக இருக்க வேலை செய்கிறது. மக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருப்பு மிளகு சதைகளில் உள்ள வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியைப் போக்குகிறது. மூட்டுவலி அல்லது கை கால் வலியால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி வெல்லம் மற்றும் மிளகினை சாப்பிட்டு பாதிப்பில் இருந்து மீளலாம்.

எடை குறைப்பு:

ஆரோக்கியமாக இருக்க அதிக எடை இல்லாமல் இருப்பதும் அவசியம். கருப்பு மிளகு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவு படுத்துகிறது. வெல்லம் கலோரி குறைந்த இனிப்பு பொருளாகும். இது அதிக கலோரிகளை குறைத்து, சர்க்கரை நோய் மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. மிளகில் இயற்கையாகவே இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது. இவை உங்கள் எடை குறைப்பு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடையை குளிர்ச்சியாக்கும் எனர்ஜி பூஸ்டர்!
வெல்லம் + மிளகு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com