ஊறவைத்த முனக்காவை குங்குமப்பூவுடன் சேர்த்து உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்!

கிஸ்மிஸ் பழம்
Dried Black Graphhttps://www.silkrute.com
Published on

முனக்கா (Dried Black Graph) நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளைத் தரக்கூடிய ஓர் உலர் பழம். இதில்  நார்ச்சத்து, இரும்புச்சத்து, சிங்க், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் C, தியாமின், ரிபோஃபிளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிரக்டோஸ் மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள், இதை கருப்பு திராட்சை பழத்தை விட மிகுந்த ஆரோக்கியமானதாக ஆக்குகிறது.

எண்ணிலடங்கா ஊட்டச் சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள குங்குமப்பூ 'கோல்டன் ஸ்பைஸ்' என அழைக்கப்படுகிறது. இதில் குரோசின், குரோசெடின் மற்றும் ஸஃப்ரானல் போன்ற கூட்டுப்பொருட்கள் உள்ளன. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆரோக்கியமான மனநிலையை தரக்கூடிய குணங்களைக் கொண்டவை. முனக்காவுடன் ஸஃப்ரான் சேரும்போது அந்தக் காம்பினேஷனிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு உச்சமடைகிறது.

முனக்காவிலுள்ள இரும்புச்சத்து இரத்தத்தின் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து சிவப்பு அணுக்களின் அளவை உயர்த்துகிறது. இரும்புச்சத்து உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு ஸஃப்ரான் உதவுகிறது. இதன் மூலம் அனீமியா நோய் குணமடைகிறது.

முனக்காவை இரவில் ஊற வைத்து மறுநாள் உண்ணும்போது அது நல்ல மிருதுத்தன்மையடைந்திருக்கும். சுலபமாக ஜீரணமாகும். அதனுடன் ஸஃப்ரானை சேர்த்து உண்ணும்போது ஜீரணம் சிறப்படைவதுடன், வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு உற்பத்தி போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவது தடுக்கப்படுகிறது. இந்த இரண்டின் கூட்டணி ஜீரண உறுப்புகளிலிருக்கும் நன்மை தரும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவிபுரிந்து மொத்த ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
செல்வங்களையும் நற்கதியையும் அளிக்கும் கருட சேவை தரிசனம்!
கிஸ்மிஸ் பழம்

இவை இரண்டும் சேர்ந்து, உடல் இயக்கத்தின் ஆளுமைக்கு உதவும் வாத, பித்த, கப (Tridoshas) தோஷங்களை சமநிலைப்படுத்துகின்றன. மேலும், ஊறவைத்த ஸஃப்ரானானது நியூரோபுரொடெக்டிவ் குணம் கொண்டது. இது மூளையின் ஞாபக சக்தியையும் அறிவாற்றலையும் மேம்படுத்த உதவுகிறது. மூளையின் ஆரோக்கியதிற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட முனக்காவுடன் சேர்த்து இதை உண்ணுவதால் மூளை தெளிவு பெற்று கவனச் சிதறலின்றி செயல்பட முடிகிறது.

இந்த இரண்டையும் சேர்த்து உண்ணுவது மாதவிடாய் காலத்து வலி, அசௌகரியம், பிடிப்பு போன்றவை குறைய உதவுகிறது. இவை கருப்பை ஆரோக்கியம் காக்கவும், இன விருத்தியின் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து உறுப்புகளின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகின்றன.

முனக்கா இயற்கையான இனிப்பு சுவை கொண்டது. மலச்சிக்கலை நீக்கும். இதிலுள்ள பாலிபினால் மற்றும் பிளவனாய்ட் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து செல் சிதைவை தடுக்க உதவுகின்றன. இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யும்.

இத்தனை நற்பயன்கள் கொண்ட, கிஸ்மிஸ் என்றும் ரெய்சின்ஸ் என்றும் கூறப்படும் முனக்காவை நாமும் எந்த நேரமும், எப்படி வேண்டுமானாலும் உட்கொண்டு பயனடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com