
வாயுவைக் போக்கும் வெள்ளைப்பூண்டு:
வெள்ளைப் பூண்டை உரித்து தோல் நீக்கி சிவக்க வறுத்து உணவு உண்ணும் போது முதல் பிடி இந்த வறுத்த வெள்ளைப் பூண்டை கலந்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட உடலில் வாயு நீங்குவதுடன் மறுபடியும் வாயு ஏற்படாது.
சில குழந்தைகளுக்கு மாந்தத்தினால் வலிப்பு ஏற்படும்:
உடனே, வெள்ளைப் பூண்டை தட்டி நடு முதுகு எலும்பில் பற்றுப்போட வலிப்பு குறைந்து பிறகு அடியோடு நின்று விடும்.
சரும வியாதியா?
சரும வியாதிகளுக்கு வெள்ளைப் பூண்டை அரைத்து ஆலிவ் எண்ணையில் கலந்து பூசி வந்தால் சில நாட்களில் சரியாகும்.
உங்களுக்கு இரத்த அழுத்தமா?
வெள்ளைப் பூண்டை நசுக்கிப் சாப்பிட இரத்த அழுத்தம் நீங்கும்.
இரத்தக் கொதிப்பு ஏற்பட்டு விட்டதா?
பசும் பாலைக் காய்ச்சி அதில் தோலுரித்த வெள்ளைப் பூண்டுகளை நறுக்கிப் போட்டு சிறிது சர்க்கரையையும் சேர்த்து சாப்பிட இரத்தக் கொதிப்பு குணமாகும்.
புண்கள் குணமாக:
வெள்ளைப்பூண்டு, வசம்பு, ஊமத்த வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் வைத்து சிவந்து வரும் போது இறக்கி வடிகட்டி வைத்து இந்த எண்ணையை புண்கள் மீது பூச அவை குணமாகும்.
மலடு நீங்க:
வெள்ளைப் பூண்டு, மிளகு, வேப்பங்கொழுந்து, வசம்பு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும், ஒரு கோலிக்குண்டு அளவு விழுங்கி வந்தால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
பெண்களின் இடுப்பு வலி நீங்க:
வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள், நொச்சி இலை இவை மூன்றையும் சேர்த்து நசுக்கி 200 கிராம் வேப்பெண்ணெயில் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். ஆறிய பிறகு வடிகட்டி இதை பூச இடுப்பு வலி குணமாகும்.
வெள்ளைப்பூண்டுடன் 7 மிளகையும், 9 மிளகாய் இலைகளையும் சேர்த்து அரைத்து காலை மாலை சாப்பிட குளிர் காய்ச்சல் பறந்தே விடும்.
இடுப்பு பிடிப்பு நீங்க:
ஒரு வெள்ளைப் பூண்டை தோல் நீக்கவும். பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு இவற்றை எடுத்து ஒன்றாக அரைத்து ஒரு கொட்டை பாக்கு அளவு காலையில் சாப்பிட இடுப்புப் பிடிப்பு சரியாகும்.
சீதபேதி நீங்க:
சிலருக்கு சீதபேதிஏற்பட்டு இரத்தமும் போகும். இதற்கு ஒரு பூண்டை எடுத்து உப்பைத் தடவி தீயில் போட்டு பொசுக்கி வேண்டும் பிறகு மேலிருப்பதைஉதிர்த்து விட்டு அதை அரைத்துத் தயிரில் கலந்து காலை மட்டும் கொடுக்க சீதபேதி நீங்கும்.
சொட்டை நீங்க:
சிலருக்கு தலையில் பூச்சி வெட்டு ஏற்பட்டு சொட்டையாக இருக்கும். சுத்தமான தேனில் வெள்ளைப் பூண்டை பொடி செய்து குழைத்து பூச்சி வெட்டு உள்ள இடத்தில் நன்கு தேய்த்து வந்தால் சிறுகச் சிறுக அந்த இடத்தில் முடி வளரும்.
பெண்களின் மாதவிடாய் வலி நீங்க:
பூண்டுடன் மிளகு, துத்தி இலை இவற்றை தலா 40 கிராம் எடுத்து அத்துடன் 10 கிராம் வசம்பு சேர்த்து அரைத்து மாதவிலக்கு காலத்தில் சாப்பிட வலி நீங்கும்.
காக்கா வலிப்பு சரியாக:
பூண்டுடன் விளாம் பிசின் வைத்து அனைத்துத் தயிரில் கலந்து சாப்பிட காக்கா வலிப்பை தடுக்கும். வெள்ளைப்பூண்டு, வசம்பு, அவுரி இலைகளை ஒன்றாக சேர்த்து நசுக்கி மெல்லிய துணியில் வைத்து மூக்கில் பிழிய வேண்டும் உடனே காக்கா வலிப்பு சரியாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)