
இயற்கையில் கிடைக்கும் உன்னதமான மருந்து இஞ்சி என புகழ்கிறது ஆயுர்வேதம். தானும் சுலபமாக செரித்து தன்னுடன் சேர்ந்திருக்கும் மற்ற உணவுகளை சுலபமாக செரிக்கச் செய்யும் அற்புதமான உணவு இது.
கல்லீரலை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். கொழுப்புச் சத்தை குறைக்கும்.
மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி இதய சுவாச தசைகள் சீராக இயங்கவும் உதவுகிறது இஞ்சி. இதய அடைப்பு கரைய தினசரி உணவில் ஓரளவாவது இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்தக்குழாயின் உட்புறம் அடைப்பு சேர்வைதை இஞ்சி தடுக்கிறது. ஏற்கனவே உருவான அடைப்பையும் கரைக்கிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை தூண்டிவிடும் வல்லமை உண்டு.
குடலில் சேரும் சிறு கிருமிகளையும் அழித்து விடும் தன்மை உண்டு. வயிற்றுக் கோளாறு, வாந்தி, கர்ப்பிணி பெண்களுக்கு வரும் மசக்கை, வாந்தி, மூட்டு வலி, ஜுரம் என பல நோய்களுக்கு நிவாரணம் தரும் இயற்கை மருந்து இஞ்சி.
முகச்சுருக்கம் மறைய:
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து அரை டீஸ்பூன் சுத்தமான தேனில் சில நிமிடங்கள் ஊற வைத்து, இந்த தேன் இஞ்சியை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் முகச்சுருக்கங்கள் நீங்கி இளமை தோற்றம் பெறும்.
நீரிழிவு பிரச்னை தீர:
இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி குடித்து வந்தால் நீரிழிவு பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.
கொழுப்பு கரைய:
சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி கழுவி அதை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்தால் இடுப்பு பகுதியில் கொழும்பு சேராமல் தடுக்கும்.
பசியை தூண்ட:
பசி உணர்வே இல்லாதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட நாவின் சுவை மூட்டுகளை தூண்டி இஞ்சி பசியை கிளறி விடும்.
வாத மூட்டு வலி குறைய:
இஞ்சி சாறை கொதிக்க வைத்து வடிகட்டி வெல்லம் கலந்து குடித்தால் வாத கோளாறுகள் நீங்கி உடல் பலம் ஆகும். மூட்டு வலிக்கு இது தீர்வு தெரிகிறது.
பித்தம் தணிய:
சிலருக்கு பித்த அதிகமானால், காலையில் குமட்டல் இருக்கும். இதற்கு இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாட்டிலில் தேன் எடுத்து நன்றாக மூழ்கும் அளவுக்கு போட்டு ஒரு வாரம் ஊற விட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
ஜலதோஷ தலைவலி குறைய:
ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். அதற்கு ஒரு கரண்டி நல்லெண்ணெய் சில இஞ்சிதுண்டுகளை போட்டு காய்ச்சி ஆறியதும் அந்த எண்ணையை தலையில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து குளித்தால் ஜலதோஷம்தலைவலி போய்விடும்.
இருமல், தொண்டை வலி குணமாக:
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறு துண்டு இஞ்சி நறுக்கி போட்டு அத்துடன் இரண்டு பூண்டு தட்டில் சேர்த்து சில துளி எலுமிச்சை சாறு விட்டு கால் மணி நேரம் கொதிக்க விட்டு ஆறியபின் எடுத்து வடிகட்டி இதை அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி அருந்தினால் இருமல் உடனே நிற்கும் தொண்டை வலியும் குணமாகும்.
தலைவலி குணமாக:
சிலருக்கு பனியின் தாக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கு இஞ்சி நல்ல மருந்து. இஞ்சியை தோல் சீவி பசை போல அரைத்து அந்த பசையை வலிக்கும் தலைப்பகுதியில் தடவினால் தலைவலி காணாமல் போகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)