
எல்லா வகையான தேயிலைகளும் உடலுக்கு நன்மை தரக்கூடியது தான். இருந்தாலும் கிரீன் டீ க்கு ஒப்பற்ற சக்தி இருக்கிறது. மூப்படைவது மற்றும் செல்களை சேதப்படுத்துவது ஆகியவற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்புத் திறன் 'கிரீன் டீயில்' உள்ளது. இது தோலை ஆரோக்கியமாக சுருக்கமின்றி பராமரிக்கிறது . பற்சிதைவு, ஈறு நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கிறது. தொற்றை எதிர்த்து போராடுதல், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், இதய நோய், நீரிழிவு மற்றும் மூளை நோய் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கிறது. எலும்பு அடர்த்தியையும் அதிகரிக்கிறது.
இதில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கிறது. இரைப்பை, பெருங்குடல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பச்சை தேயிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு டிக்காஷன் எடுத்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உலகின் டாப் 10 உணவுகளில் இதுவும் ஒன்று.
பெரும்பாலும் மக்கள் தங்கள் காலையை ஒரு கோப்பை தேநீருடன் தொடங்குவார்கள். பால் டீக்கு பதிலாக கிரீன் டீ குடித்தால், அது உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதமாக்க உதவுகிறது.
கிரீன் டீயில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் வாய்ப்புற்று நோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது என்கிறார்கள். அது வாய்ப்புற்று நோய் செல்களை அழித்து வாயிலுள்ள மற்ற செல்களை பாதுகாக்கிறது என்கிறார்கள். இதுவே மற்ற செல்களை அழிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கிறது என்கிறார்கள். மேலும் இது உடல் உள் வீக்கங்கள் குறைக்க மற்றும் இதய நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
கிரீன் டீ அருந்துவது பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு பக்கவாதம் தாக்குவதற்கு வாய்ப்புகள், மற்றவர்களை விட குறைவாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலை நேரத்தில் மதிய உணவிற்கு பிறகு சோர்வாக உணர்கின்றவர்கள் ஒரு கப் கிரீன் டீ சாப்பிட சோர்வு மாறும். கிரீன் டீயில் காஃபினுடன், L-தயனைன் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு குறைந்தது 6 கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது.
இதிலுள்ள "பாலிஃபீனால்கள்"எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நரம்பு செல்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து வலியை நீக்கும். மேலும் தீவிர பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த கிரீன் டீ உதவுகிறது. தொடர்ந்து உட்கொண்டால், இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். கொரியன் ஆய்வு ஒன்றில், கிரீன் டீயை குடிப்பதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33% குறைவாக தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கது கிரீன் டீ என்று பலராலும் சிபாரிசு செய்யப்படும் இதனை ஒரு நாளைக்கு 800 மி.கிராமிற்கு மேல் எடுத்துக் கொண்டால் அது கல்லீரலை பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஐரோப்பாவின் புட் சேப்டி அதாரிட்டி ஆராய்ச்சியாளர்கள்.
கிரீன் டீயில் காஃபின் இருப்பதால், அதை படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடித்தால் தூங்குவதில் சிரமம் ஏற்படலாம். இரவில் அதிக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.