'இட்லி'யை கண்டுபிடித்தது யார் தெரியுமா?

Benefits of Idly
Idly
Published on

அந்த காலத்தில் இருந்து தற்போது வரை தலைமுறைகளைத் தாண்டி, நாம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இட்லி. குழந்தைகளுக்கு கூட முதன் முதலில் இந்த உணவைத்தான் சாப்பிட கொடுப்பார்கள். அதேபோல் உடல்நிலை சரி இல்லாத சமயங்களிலும் அனைவரின் தேர்வும் இட்லியாகத்தான் இருக்கும்.   

நம்மில் பலர் இட்லி  பிரியர்களாக இருப்போம். பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லியாகத்தான் இருக்கும். ஒரு சிலர் உணவகத்திற்குள் நுழைந்து 10 தடவை மெனுவை பார்த்தால் கூட இறுதியில் இட்லி என்றுதான் ஆர்டர் செய்வார்கள். அந்த அளவிற்கு இட்லி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

ஆமாங்க, இட்லி சாப்பிடுவதால், நாம் அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறுகிறோம்.

இட்லியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

இட்லி அல்லது தோசை மாவில் சேர்க்கும் அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் போன்றவை  உடலுக்கு ஆற்றல் அளிக்கும் பொருட்களாகும். அதிலும் மாவை புளிக்க வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள நொதித்தல் தன்மையால் புரத சத்துக்கள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
நாமே நமக்கு வைக்கும் ஆப்பு! இது தேவையா மக்களே?
Benefits of Idly

சப்பாத்தி, பொங்கல், தோசை, பூரி போன்ற மற்ற உணவுகளை ஒப்பிடும் போது இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணமாவதற்கு உதவி செய்யும் நார்ச்சத்துக்கள் இட்லியில் அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனையின்றி இருக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் உடல் எடையை கணிசமாக குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இட்லியில் புரதசத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. இது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கும். இதனால் தேவையில்லாமல் அதிகளவு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைத் தடுக்க முடியும். உடல் எடையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பல நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்துக்களால் அதிக உடல் வலிமையை பெற முடியும். இதில் உளுந்து சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கு இதுத் தீர்வாக உள்ளது

இவ்வாறு நன்மையளிக்கும் இட்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானால் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும் என்பதால், காலை நேரத்தில் மட்டும் அல்ல இரவு நேரங்களிலும் எடுத்துக் கொள்ளலாம்.

அது சரி, இத்தனை பெருமைகள் கொண்ட 'இட்லி'யை கண்டுபிடித்தது யார் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன் மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com