ஆல் ரவுண்டு ஆரோக்கியம்; அன்னாசியில் இருக்கு அம்புட்டு ரகசியம்!

 pineapple
pineapple
Published on

அன்னாசிப்பழம் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெப்பமண்டலப் பழமாகும். அன்னாசிப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட, தனித்துவமான, பலரால் விரும்பப்படும் பழமாகும். இவற்றில் வைட்டமின்கள் சி, ஏ, கே மற்றும் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அன்னாசிப்பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எடை குறைக்க உதவுகிறது. உடம்பில் உள்ள வாயுக்களை வெளியேற்றும் ஆற்றல் அன்னாசி பழத்தில் உள்ளது. இது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

ஒரு சில பழங்களை எந்த வேளையிலும் சாப்பிடலாம், அதில் ஒன்று இந்த பழம். இந்த பழத்தை சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை, சீதபேதியை குணமாகும் , சிறுநீரகக் கற்களை கரைக்கும், உடல்வலி, இடுப்பு வலியை குறைக்கும், பித்தத்தை குறைக்கும், உடல் உள் உறுப்புகளை பலப்படுத்தும். அன்னாசிப்பழத்தில் சிட்ரிக் அமிலத்துடன் மாலிக் அமிலமும் உள்ளது. சாப்பிடும் போது நாக்கு கூச்ச உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதான்.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் எனப்படும் புரோட்டியோலிடிக் நொதியும் உள்ளது. இது தண்டு, இலைகள் மற்றும் அன்னாசி பழம் முழுவதும் உள்ளது. ப்ரோமைலின் என்பது ஒரு சிறப்பு வகை புரதம். இது மற்ற புரதங்களை அமிலங்களாக உடைக்கிறது. மாமிச உணவு புரதங்களை கூட அமினோ அமிலங்களாக உடைக்கிறது. அதனால், இறைச்சித் தொழிலில் இறைச்சியை மென்மையாக்க அன்னாசிப் பொடியும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முட்டை - பால் - இறைச்சி - ஒரு கப் சோயா... நோய்களில் இருந்து தப்பிக்க எது பெஸ்ட்?
 pineapple

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது. எனவே, இந்தப் பழத்தை சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும்.

எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு, அன்னாசியிலுள்ள கால்சியம், மாங்கனீசு உதவுகின்றன. கிட்டத்தட்ட 165 கிராம் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு அன்னாசிப்பழத்தை தவறாமல் தர வேணடும். இதன் பழச்சாறு அவர்களுக்கு நல்ல பசி ஏற்பட உதவும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பினோலிக்ஸ், ஃபிளாவனாய்டு மற்றும் வைட்டமின் C சத்துக்கள் இந்த அன்னாசியில் நிறையவே இருப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. முக்கியமாக இதில் வைட்டமின் டி மற்றும் ஜிங்க் இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தியைத் தடுக்க உதவுவதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன.

இளம் வயது பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை மாதவிடாய் வலி. அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு துண்டு இஞ்சியை சீவிப் போட்டு கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த மாதவிடாய் வலி குறையும். மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

அன்னாசிப் பழத்தை வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் டிப்தீரியா, நிமோனியா போன்றவற்றின் தொந்தரவுகளிலிருந்து நாளடைவில் விடுபடலாம்.

ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி 4 தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதை அப்படியே இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசிப்பழம் உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகளும், மூல நோய் உள்ளவர்களும் இதனை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்க ஒரு சூப்பர் வழி: 5-4-5 நடைப்பயிற்சி!
 pineapple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com