ஆப்பிள் + லவங்கப் பட்டை = பிங்க் டீ... ஒரு கப் தருமே புத்துணர்ச்சி!

பிங்க் டீ
பிங்க் டீ
Published on

ஆப்பிள் மற்றும் லவங்கப் பட்டை சேர்த்து செய்யப்படும் 'பிங்க் டீ' பல நன்மைகளைக் கொடுக்கும்.

எப்படித் தயாரிப்பது?

ஒரு பெரிய துண்டு ஆப்பிளைத் துருவித் கொள்ளுங்கள். அத்தோடு சிறிய பட்டை, சிறிய துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 4 மிளகு, தேன், ஒரு க்ரீன்டீ அல்லது பிளாக் டீ பேக் ஆகியவைதான் தேவை.

இவற்றில் தேன் ஆப்பிள் தவிர மற்ற எல்லா பொருள்களையும் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அது ஒன்றரை கப் ஆனதும் வடி கட்டி, துருவிய ஆப்பிள், தேன் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

இதன் நன்மைகள்:

இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள மலிக் அமிலம் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்தது. உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

இதில் இயற்கையாகவே வைட்டமின் சி அதிகம். இது எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய்த் தொற்றுக்களிலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள பாலிஃபினால் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையும்.

இது ரத்தச் சர்க்கரை அளவையும் குறைக்கக் கூடியது. சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கக் கூடியது.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் வெந்தயம் + நெய்… வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பிங்க் டீ

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் கணிணி முன் வேலை செய்வதால் உடல் உழைப்பு இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பலருக்கும் வயிற்றுக் கோளாறுகள், ஜீரணிப்பதில் சிக்கல் என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது போன்ற அனைத்துப் பிரச்சனைகளிலிருந்து பிங்க் டீ நம்மை பாதுகாக்கிறது.

இதில் கலோரிகள் மிகக் குறைவு. காபி டீயில் இருக்கும் கலோரிகளை விட குறைவு. அதனால் நன்மையே தரக் கூடியது. நீங்கள் சிவப்பு ஆப்பிளுக்குப் பதிலாக பச்சைஆப்பிள் கூட பயன் படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
இவங்க எல்லாம் கட்டாயமா வெங்காயம், பூண்டு சாப்பிடக் கூடாது - யாரெல்லாம்? ஏன்?
பிங்க் டீ

தினமும் பிங்க் டீ குடித்தால் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். வெறும் வயிற்றில் இந்த டீ குடிக்க இதய நோய்கள் குணமாகும்.

இதில் பொடாசியம், மக்னீசியம் சி சத்து மற்றும் சோடியம் உள்ளதால் எலும்புகள் நல்ல வலுப்பெறும். எலும்புகளுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இந்த டீயைத் தொடர்ந்து குடித்துவர எலும்பு ஆரோக்கியம் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com